பக்கம்:தேவநேயம் 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் காலவேந்தர், நால்வரணப் பகுப்பு, இற்றைப் பிறவிக் குலங்கள் என்பனவெல்லாம் இப்பகுதியில் ஆயப்படுகின்றன. தெளிநிலைக் காண்டம் என்னும் இறுதிக் காண்டம் திருவள்ளுவர் தமிழரின் கண்திறப்பிப்பு, ஆங்கிலர் ஆட்சி, கால்டுவெல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மறைமலையடிகள் முதலோர் தொண்டு, தமிழ்நாடு முன்னேறும் வழி, தமிழ்நாட் டெல்லை வரவரக் குறைதல் என்பன எண்ணப்படுகின்றன (319-359), "குமரிக்கண்ட முதல் மாந்தன் மொழியின் "அசைநிலைக் காலத்தில் சீனரின் முன்னோரும், கொளுவு நிலைக் காலத்தில் சித்தியரின் முன்னோரும், பகுசொன்னிலைக் காலத் தொடக்கத்தில் சுமேரியரின் முன்னோரும் பிரிந்து போயிருதல் வேண்டும்” என்கிறார் (35). | பொற்காலம் என ஒன்று தமிழகம் தவிர வேறு எந் நாட்டிற்கும் இருந்ததில்லை. அது மாழை (பொன்) பயன்கொண்ட காலம் என விரிவாக விளக்குகிறார் (37-44), இயற்கை வளம் நிறைந்த பொற்காலத்தில் கோடை மழை, காலமழை, அடைமழை, படை மழை ஆகிய நால்வகை மழையும் காலம் தப்பாது பெய்தது எனச் சுட்டுகிறார். இவற்றுள் படைமழை பாவாணர் ஆக்கச் சொல் (44), கற்கால மொழி இயற்கை அல்லது முழைத்தல் மொழி என்றும் (30) பொற்கால மொழி தொகுநிலை மொழி என்றும் (50) சுட்டி விளக்குகிறார். 'செம்பு' என்பதை எடுத்துக்கொண்டு வேர் விளக்கமாகப் பற்பல காட்டி, "நூற்றுக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் இனம் மறைந்து வழங்குகின்றன என்றும், தமிழ் உண்மையில் திரவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகும் என்றும் அறிந்து கொள்க” என்பது தம் கோள் நிறுவுதலாய்ச் சிறக்கின்றது (58), பாண்டியன், சாத்து, தீவு, மண்டலம், தேயு, தாமரை, வடவை, நரன், ஐந்திணை இன்னபல சொற்கள் தனிநிலைக் காண்டத்தில் ஆய்ந்து தெளிவிக்கப்படுகின்றன. கலவுநிலைக் காண்டத்தில் அகத்தியர், இராமாயணம், பாரதம், நால்வரணப் பகுப்பு, முத்திருமேனிப் புணர்ப்பு, தொல் காப்பியம், கடைக்கழகக் காலமன்னர்கள், மொழி கலை இலக்கியத் துறைகளில் ஆரியக் கலப்பு என்பவை விரிவாக ஆராயப்படுகின்றன. "முகமண்டபமும் கூடகோபுரமும் கொண்ட மணிமாட மாளிகைகள் நிறைந்த ஒரு மாநகரம், ஆழ்கடலில் மூழ்கிப்போன பின் அதன் கற்கள் சிலவற்றை எடுத்துக் கட்டிய ஒரு சிற்றில் போன்றதே தொல்காப்பியம்” என்று பாவாணர் கூறுவதை நோக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/70&oldid=1431388" இலிருந்து மீள்விக்கப்பட்டது