பக்கம்:தேவநேயம் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 தேவநேயம் தேவநேயம் "அதற்குமுற்பட்ட தமிழ்வளம் எத்தகையதாக இருந்திருக்கும்” என்பது அவர் ஆய்ந்து கண்ட வெளிப்பாடாம் (205). சகர முதற் சொற்களாக நூற்றுக்கு மேற்காட்டி, அவற்றுள் தொல்காப்பியர்க்கு முன்னவை, பின்னவை என வகுப்பது தனிப் பேராய்வாகும் (208-210), தமிழர் தம் கலவாணிகச் சிறப்பு அரிசி, இஞ்சி முதலாய சொற்களைக் கொண்டும், கலம் தொடர்பான பெயர்கள் உலக வழக்கில் உள்ளமை கொண்டும் உறுதி செய்கிறார். ஆரியர் பொருள் கவர்வு வகைகட்குத் தமிழக அரசர் ஏமாந்து நின்ற நிலை, குமுகாயக் கேடு, மொழிக்கேடு என்பவற்றை எடுத்துக் காட்டுடன் விளக்கி, இந்நாளிலும் அவற்றைப் போக்கக் கருதாமல், தமிழர் தமக்குள்ளே கலாமும் கலகமும் செய்து வருதலை நொந் துரைக்கிறார் (309). "காட்டிக் கொடுக்கும் போலித் தமிழர் உதவியின்றிப் பிராமணர் தமிழுக்கும் தமிழர்க்கும் மாறாக எதுவும் செய்ய முடியாது" என்று அழுத்தமாகக் கூறுகிறார். பாவாணர் (240) நம்மைத் திருத்தாமல் நாம் திருந்தாமல் பிறரைப் பழித்தலால் என்ன பயன்? என்பதை எண்ணச் செய்கிறார் எனலாம். எதிர்காலத்திலேனும் பிராமணர் தமிழரோடு ஒன்றி வாழ்ந்து கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என்றும் (358) படிப்படியே தமிழ்க் குடியினர் எவ்வெம்முறைகளை மேற்கொண்டு ஓரினமாதல் வேண்டும் என்றும் (367-68) கூறுவன மறுப்பற்ற பெருநலப் பார்வையாம். உலகத் தமிழ் மாநாடு பற்றிய பாவாணர் கருத்துகளை ஆளும் அரசு எண்ணிச் செயல்படின் மொழிக்கு ஆக்கமாம். 20. தமிழன் எப்படிக் கெட்டான்? "தமிழ்த் தடைகளை யெல்லாம் சல்லி சல்லியாகத் தகர்த் தெறியவேண்டும்” என்பதற்காகச் சில சிறு சுவடிகள் அச்சாவதாக 23.10.41இல் திருச்சிப் புத்தூரில் இருந்து கடிதம் எழுதியுள்ளார் பாவாணர். அச்சுவடிகள் 9. அவற்றுள் தலைச் சுவடி 'தமிழன் எப்படிக் கெட்டான்?' என்பது அது 40 பக்கம் 2 அணா என்று குறிப்பிடுகிறார் பாவாணர். அப்பதிப்புக் கிடையாமல் இருந்து திரு.தி.மா. சரவணன் வழியாகத் திரு.அரிமாவளவனார்க்குக் கிடைத்து மீள் பதிப்புப் பெற்றுள்ளது. திருச்சி பாலக்கரை இசுலாமிய அச்சு எந்திர சாலையில் சமரசம் வெளியீடு 1 ஆக 1941இல் வெளிவந்துள்ளது முதற்பதிப்பு என்பது அதனால் அறியப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/71&oldid=1431389" இலிருந்து மீள்விக்கப்பட்டது