பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

தேவலீலைகள் !

முறையா? பிடிசாபம்" என்று மகாவிஷ்ணு மிரட்டினார் என்று எண்ணிடத்தான் எவருக்கும் தோன்றும். ஆனால் நடந்தது. அதுவன்று தம்மிடம் மையல் கொண்ட இந்திராணியை நோக்கி மகாவிஷ், இச்சைக்கினிய இந்திராணியே! இங்கே உன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்து வைக்க இயலாது. பூலோசத்திலே, நான் கிருஷ்ணனாக அவதார மெடுக்கப் போகிறேன். அது சமயம் நீயும், பூலோகத்திலே இராதையாக அவதரித்திடு; உன் மனோபீஷ்டம் நிறைவேறும்" என்று அருளிச் செய்தாராம். அதுபோலவே, விபசாரநோக்கங்கொண்ட இந்திராணி, ராதையாகப் பூலோகத்திலே பிறந்து நாராயணனின் அவதாரமாகிய கிருஷ்ணனிடம் சுக சல்லாபமாக வாழ்ந்ததாகப் புராணம் கூறுகிறது.

இப்படிப்பட்ட இந்திரன் - இந்திராணி என்பவர் களைத்தான், இந்து மார்க்க சிகாமணிகள் என்போர், கடவுள் பட்டியிலே சேர்த்துவைத்துக்கொண்டுள்ளனர். ரிக்வேதத்திலே இந்திரனைக் குறித்துப் பலசுலோகங்கள் உள்ளன. காமுகனை, - பிறன் இல்லம் நுழைபவனை, சோரம் போனவளை மனைவியாகக் கொண்டவனைத் தேவர்க்கரசன் என்று வெட்கமின்றிக்கூறிக்கொண்ட ஆரியக் கூட்டத்தின், அந்தநாள் மனப்பான்மை கூடக் கடக்கட்டும். இன்றும் ஆரியர்கள், இந்திராதி தேவர்களை இஷ்டசித்தி மூர்த்திகளென்று பூஜித்து வணங்கிப் பலன் பெறவேண்டுமென்று உபதேசிக்கவும் துணிகின் றனர். அவர்களின் துணிவு காணும்போது, கோபம் பிறக்கிறது. ஆனால், அந்தப் பேச்சை நம்பி, இவ்வளவு இழிதன்மைகளைக் கொண்ட கதைகளை நம்பி, மனிதத் தன்மையும், புனிதத் தன்மையுமற்ற கற்பனைகளை