பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

9

நிலை எய்தியோனின் காமச்சேட்டை இதுபோலென்றால், அதற்கு அடுத்தபடியிலே - வைத்துப் பேசப்பட வேண்டிய தபோதனர்கள் ரிஷிகள் ஆகியோரின் யோக்கியதை எப்படி இருக்கும். என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இந்திரன் இவ்வண்ண ம் அகலிகையிடமும், வபுஷ்டமையிடமும், அரம்பையரிடமும் ஆனந்தமாக இருந்து, காம இச்சைக்காகச் செய்யத் தகாத செயல் பல புரிந்து இருந்ததுபோலவே இந்திராணி அம்மையும் அவர்களுடைய சக்தியானுசாரம் ஏதோ சத்காரியம்'! செய்யாதிருக்கவில்லை.. ,

'ஒருமுறை இந்திராணிக்கு மகாவிஷ்ணுவின் மீது மோகம் பிறந்ததாம். அவரிடம், அம்மை தமது ஆசை யைத் தெரிவித்தார். "அடி பேதாய் கற்புக்கரசியாக வாழவேண்டுவது காரிகைகளின் கடனன்றோ ! தேன் மாதரும் பூவுலக மாதரும் சற்குணவதிகளாக இருக்க, நீ ஓர் வழிகாட்டியாக இருக்க வேண்டாமோ? சௌந்தரி யம்மிகுந்தவனும், போகபோகாதிகளிலே இலயித்திருப் பவனும், ரசிகனுமாகிய இந்திரனுக்கு நீ பாரியையானாய். உனக்கேன் உதித்தது. இக்கெடுமதி! பாபிதேவலோகத் திலே. இப்படி ஒரு தூர்த்தை - இருத்தல் தகுமா? அதிலும் உனக்குத்தான் எவ்வளவு துணிவு! மும்மூர்த்தி களிலே ஒருவனாகிய என்னிடம், சீதேவி பூதேவி மணாள னாகிய என்னிடமே உன் காமக் கண்களை ஏவினாயே எவ்வளவு நெஞ்சழுத்தம்! நான் காமுகனா? பிறன் இல்லம் மழையவனும் பேதாய் பெருங் கடவுளரிலே ஒருவனாகிய என்னிடம் மோகம் கொண்டாயே, தகுமா? - .