பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தேவலீலைகள் !

  • பிரம லீலை முடிவடையவில்லை. இதுபோன்ற இன்னும் பல வீலைகளை, இந்தப் பிரபஞ்சசிருஷ்டியிலே சதா சர்வ காலமும் ஈடுபட்டிருக்கும் பிரமன் செய்த வண்ணம் இருந்திருக்கிறார். நாம் துப்பறிந்து கூறினதல்ல, தோத் திரப் புத்தகங்களென்று ஆரியர் கூறப்படும் புராணங் களிலே இருப்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறோம். பார் வதியாருக்குத்திருமணம் அதற்குப் பிரமன் புரோகிதர். முகமூடி அணிந்த அந்த மணப்பெண்ணின் காற் பெரு விரலின் அழகைக் கண்டதும், ஆஹா! விரலே இப்படி இருக்கும் போது, பாதம் எவ்வளவு அழகாக இருக்கும். பிறபிற..... என்று யோசித்தாராம் பிரமன்' காமாம் தகாரரானார்! திருமணத்துக்காக மூட்டப்பட்ட ஓம் குண்டமே அணைந்துவிட்டதாம், அவருடைய கெட்ட எண்ணத்தின் விளைவின் காரணமாக, எப்படி இருக் கிறது யோக்கியதை! திருமணப் புரோகிதர்க்கு எத் தகைய திருக்கல்யாண குணம். படைப்புத் தொழிலின் தலைவர் மனதிலே, எப்படிப்பட்ட பாதக : எண்ணம் திருமண நேரத்தில்? இத்தகைய தீய நினைவு கொண்ட வரைத் துதிக்க வேண்டுமாம், இதற்குப் பெயர் பக்தி யாம். ஓய்ந்தாரா பிரமன் இத்துடன்? இல்லை. ஒருமுறை 'பிரமனே அசுவமேத யாகம் செய்தாராம். யாக. காரியத் தைத் தரிசிக்க - தேவபத்தினிகள் வந்தனர், யாக குண்டத்தருகே வீற்றிருந்த பிரமன், யாகத்தைத் தரிசிக்க வந்த தேவ பத்தினிகளைத் தரிசித்தார். அவ் வளவுதான்! - ஆசை கட்டுக்கடங்க மறுத்தது. காம வெள்ளம். இதன் பயனாகத்தோன் றினராம் ஓமகுண்டத் தருகிலேயே - பிருகு, அங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தி யர் போன்ற புண்ணியவான்கள் - ஓம குண்டத்தருகே