பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

27

முண்டா? அந்த சிவலோகத்திலே இருப்பவர்களின் யோக்யதைக்கு இரு எடுத்துக் காட்டுக்கள் தந்தேன், - அத்தகையவர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இடத் துக்குப் போகவேண்டும் என்று இனியும் கருதும் - (மெய்யன்பர்கள் இருப்பரேல், மெய்யல்ல நண்பர் களே. இனம் இனத்தோடு என்பதற்கேற்ப அவர்கள் - நாடுகின்றனர் என்றே கருதிடவேண்டும்! தீயாரைக் காண்பதுவும் தீதாமே! சுகுமாரனும், குணநிதியும் சென்ற இடத்துக்குச் செல்வது தீதினும் தீது என்று நான் எண்ணுகிறேன். பன்றியும், எருமையும் புரண்டு கொண்டிருப்பதைக் கண்டபிறகும், அந்தக்குளத்திலே - நீர் பருக யாருக்கு மனம் இடந்தரும்? மதுக்குடத்திலே பாலூற்றி யிருந்தால் பருகுவார் யார்? - மலங் கொட்டும் குழி என்று தெரிந்த பிறகும், அங்கு மனை அமைக்க எவன் விரும்புவான்! அதுபோல், சுகுமாரனும், குண - நிதியும் சென்றடைந்த சிவலோகத்தில், பாடுபட்டு பிறனை வஞ்சிக்காது, பாபம் புரியாது, கேடு செய்யாது உள்ளவர்களுக்கு வேலையில்லை விரும்பவும் செய்யார். ,