பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தேவலீலைகள் !

சாட்சாத்காரமாகி, சகல ஜீவாத்மாக்களுக்கும் ரட்சக னாகி பதியாகி உள்ள பரமன்--ஆண்டவன்!

கடவுளைப் பற்றிக் கசிந்து கண்ணீ ர் மல்கிப் பலர் கூறுவர். இதுபோல். ஆம். நெறி, ஒளி, நீதி, வாய்மை, தாய்மை, அன்பு--இவையே கடவுள். அமிவான தெய்வமே! எங்கும் நிறைகின் றன பொருளே! அன்பே சிவம்! --- உண்மையே ஆண்டவன்!--என்று பலர் போதித்தனர். -

இவை இருக்கும் இதே இடத்திலே, கடவுட் கதை கள் வேறு உண்டு! தத்துவம் ஒருபுறம், தத்தித்தோம் எனத் தாண்டவமாடும் தர்ப்பா சூரரின் தந்திரக் கதை கள் பக்கத்திலே! இவையும் சரி.. அவையும் சரியே என்று கொண்டு, "இடது காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே' என்பதற்குத் தத்துவம் இதுவென்பதை யும் கேட்டுக்கொண்டு, இடதுகாலை இன்னவர் இந்த நாள் இந்தமடத்திலே இவ்வளவு சொகுசாகத் தூக்கி நின்றாடும் காலை, இன்ன மடாதிபதி இத்தனை பெரிய தொந்தி, இப்படிக் குலுங்கநகைத்து, இமைகொட்டாது பார்த்து, இன்னின்ன பரிசுகள் தந்தார். 'என்ற இந்த நடவடிக்கையும் கண்டு தத்துவத்திற்கும் - நடத்தைக் கும் உள்ள தகாத தன்மையைக் கண்டு தணலிடு புழு வெனத் துடிக்காது, கிணற்றுத் தவளைபோல் இருந்து விடுகின்றனர்--மக்கள் -- மக்களின் தலைவர்களிலே பலர்!

உங்கள் கடவுள் இப்படி இருப்பார், என்று விநாயக உருவத்தைக் காட்டும் போது, அந்த வைதிகன் கன்னத்திலே பகுத்தறிவாளனின் கரம் விளையாடும்