பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

35


நடவளின் வரலாறு இது, அவருகக் கூறி காலம் விரைவிலே வரும் என்பது என் துணிபு. உன் கடவளின் வரலாறு இது, அவருடைய குணாதிசயம் இன்னவை என்று, இன்றுள்ள புராணதிகளைக் கூறி னால் வேறு விதியற்றவர்கள் கேட்டுகொள்வர். சொந்த மதியற்றவர்கள் பொறுத்துக் கொள்வர். சிந்தனா சக்தி உள்ளவர்கள் கேட்டுக் கொள்வார்களா? எனக்குத் தூய்மையான ஆண்டவன்வேண்டும். தீயன் வேண்டாம் என்று தீர்ப்புக்கூறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. கொஞ்சம் தெளிவு, சற்று சொரணை, -- நாடியிலே இன்னம் கொஞ்சம் முறுக்கு, மனத்திலே சற்று அதி கரித்தகவலை, அறிவிலே அக்கறை பிறக்கவேண்டும். பயபக்தியுடன் நீங்கள் கும்பிட்டு வணங்கும் விநாயகர் யார்? மூவருள் முதல்வர் என்று சைவர்கள் மார் தட்டிக் கூறிக் கொள்ளும் மூக்கண்ணனாரின் மைந்தன்! கடவுள் என்றாலே எல்லாவற்றையும் கடக் தவர் என்று பொருள். ஆனால் இங்கோ கடவுளுக்குக் குடும்பம். பிள்ளைக்குட்டி, பரத்தை முதலிய எந்தப் பாசமும் இல்லாமலில்லை. - அத்தகைய சிவனாரும், உமையம்மையும் ஒருநாள் - காட்டு மார்க்கமாக உலாவிக்கொண் டிருந்தனராம்கடலோரத்திலே இப்போது காதலர்கள் எதிரே திரை கடலும், இதயத்திலே களிப்புக் கடலும், கடலிலே *அலையும், மனதிலே கருத்தும் கொந்தளிக்க நடந்து செல்வதுபோல எல்லாவற்றையும் கடந்தவர், அங்கு இரு யானைகள் கலவி செய்திடக் கண்டாராம்! கண்ட தும் அவர் மனதிலே அலைமோதத் தொடங்கியது. மன்மதனைக் கண்ணால் எரித்தார் எங்கள் மகாதேவர்