பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎻᏮ இந்திரிமார்களின் அதிகாரமான அதிகாரபூர்வ மானதுமான அழகுக் குடியிருப்பு வட்டாரத்தைப் பின் தங்கச் செய்தவண்ணம், காரினும் கடிது சென்ற-பறந்த ‘டால்ஃபின்', தென்முனையில் பிரமாண்டமாக எழுப்பி நின்ற பங்களாவின் தலைவாசலில் வந்து நின்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டது. பார்வதி இப்பொழுது எந்த உலகத்தில் இருக்கிறாள்? மயன் உலகம் என்கிறார்களே, அது இப்படித்தான் இருக் கும் போலும் ! முன்னே நடந்துகொண்டே இருந்தான் செந்தில். பின்னே தொடர்ந்து கொண்டே இருந்தாள் பார்வதி மாடி வந்தது. நடுக்கூடமும் வந்தது. அவன் நின்றான். அவளும் நின்றாள் ; நின்றவள் மலைத்தாள் ; மலைத் தவள் சிலையானாள் ; சிலை என்றால், மோகினிச் சிலை; அசல ! அங்கே, கனமான-பெரிதான பூமாலைகள் இரண்டு பளிச்சென்று காட்சியளித்தன !

பார்வதி...'

'சொல்லுங்க...'

சொல்றேன்'