பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


கோலத்திலே கண்ட கனவு நிறைவேறாததாலே என்னைப் பெற்றவங்களோட ஆசையை என்னாலே நிறைவேற்றி வைக்க முடியாமல் போயிடுச்சு. அவங்க ரெண்டு பேரும் மாறி மாறிப் பாயும் படுக்கையுமாக ஆன சமயங்களிலே என்னாலே செந்திலாக நடமாட முடிஞ்சுது !...இந்தக் கலிகாலத்திலே எது நடக்கும், எது தான் நடக்காது என்கிறதே புரியல்லே . கொஞ்சநாள் முந்தி, என் தாயாருக்கும் தகப்பனாருக்கும் ஒரே சமயத் திலே கடுமையான ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு ; அப்பத்தான், என்னோட பாசத்தின் மனச்சாட்சி எனக்குச் சவுக்கடி கொடுக்க ஆரம்பிச்சுது :-தான் விரும்பினது நடக்கல்லே : அதனாலே, என்னை எனக்காகவே நேசிச்ச தாராவைக் கலியாணம் கட்டிக் கிட்டு, கண்கண்ட என்னோட தெய்வங்ககிட்டே நல்லாசி வாங்கிக்கிடவும் நான் என் மனசை மாற்றிக் கிட்டேன். ஆனா, தாராவைப் பெற்றவங்களோ மனசு மாறாமலும், மறைவிலே என்னை ஏசிப்பேசியும், எங்க திட்டத்தை ஏற்றுக்கிட மறுத்திட்டாங்க அந்நேரத் திலே, எப்படியோ அப்பாவும் அம்மாவும் உயிர் பிழைச்சிட்டாங்க . ஆனா...இப்ப மறுபடியும் இவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி வச்சுக்கின மாதிரி என்னைச் சோதிச்சுக்கிட்டும், சாவோட போராடிக்கிட்டும் இருக்காங்க ....அதனாலே...' அவன் பேச்சை முடிப்பதற்குள், என்னவோ சத்தம் அமர்க்களப்பட்டது டானிக் சீசா உடைந்து நொறுங்கிற்று. அந்தக் கறுப்புப் பூனைக்குப் பாலைக் காவல் வைத்திருக்கலாம் ! பார்வதி பதறிய நிலையில் செந்திலின் பெற்றோர் களின் மூக்குகளில் விரல்களைப் பரப்பிச் சோதித்துப்