பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I07 இப்போது பார்வதி நேர்கொண்ட பார்வையை விரித்தாள் : 'உங்க பேச்சு அரைகுறையாக நிற்குதுங் களே ' என்றாள். காட்டிலே கண்களைக் கட்டிக் கொண்டு தவிப்பதற்கும் எல்லை வேண்டும்தான் ! 'வாஸ்தவம்தான் ; என்னோட பேச்சும் அரைகுறை யாகத்தான் நிற்குது ; அதையாச்சும் முடிச்சுடுறேன் !' குறுக்கிட்டாள் அவள் சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க !’’ 'பார்வதி, நீங்க என்னை நம்பlங்கதானே?” நிச்சயமாக!' 'மனப்பூர்வமாகவும் நீங்க என்னை நம்பு lங்க தானே ?” "ஆமா!' 'மன ஆறுதலுக்காகக் கேட்டேன். விஷயம் இது தான். என் தாயும் தகப்பனும் என்னைக் கல்யாண ராமனாகக் காணவேணும்னு ஆசைப்பட்டாங்க : நான் ரெடி ; கல்யாணச் சீதையைத் தேடி என்னோட உள்ளம் அலைஞ்சப்ப, என் பரிசுத்தமான உள்ளத்தினுள்ளே பரிசுத்தமாகக் கொலு வீற்றிருக்கிற உங்களை என் மனசு கண்டு பிடிச்சதிலே அதிசயம் இல்லைதானே பார்வதி ? சொல்லுங்க பார்வதி சொல்லுங்க!' என்று ஆத்திரமும் அவசரமுமாகப் பதறினான் செந்தில்நாதன். 'அதிசயம் இல்லேதானுங்க!' 'எம்மனது செஞ்சது சரிதானே ?” சரிதாங்க!”