பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


பேஷ், பேஷ்...! அதனாலேதான் உங்களை நேரிலே தேடியும் ஒடியாந்தேனுங்க!... பார்வதி, இப்ப நீங்க மணப்பெண் கோலத்திலே எனக்குப் பக்கத்திலே நிற்கணும் ; அதாவது நீங்க எனக்கு மனைவியாக ஒரு வினாடி, ஒரே வினாடி ஆக்ட் பண்ண வேணும் ! உங்களையும் என்னையும் என்னோட பெற்றோர்கள் தம்பதி சமேதராகப் பார்த்தால்தான், அவங்களோட ஆவி நிம்மதியாகப் பிரிய முடியும். இது வெறும் நாடகம்தான் ; ஒரு நாடகத்துக்குள்ளே இன்னொரு நாடகம்!- அவ்வளவுதான்... மற்றப்படி இதிலே சூதோ, தந்திரமோ கிடையவே கிடையாதுங்க!- நான் உங்களைத் திரிகரசுத்தியோட காதலிச்சவன் ; காதலிக்கிறவன் என்கிற தருமச் சத்தியத்தை மதிச்சும் நம்பியும் நல்ல வாக்குக் கொடுத்திங்கன்னா, என்னைப் பெற்றவங்க கடைசி நிம்மதி அடைகிறதோடே, நான் அதிர்ஷ்டசாலி யாகி முதல் நிம்மதியை அடையவும் முடியும், பார்வதி!' செந்திலின் பேச்சு தழதழத்தது. சமூக அநீதியான வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிர்நீச்சல் போட்டு வீரத்தமிழச்சியாகத் தலைநிமிர்ந்து நிற்கக் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு நானே வரதட்சணைக் கொடுத்துக்கூட மனசுக்குள்ளே ஆசைப்பட்டதும் உண்டு ஏன், நானே உங்களுக்கு வரதட்சணையாகவும்கூட திட்டமிட்டிருந்தேன்!” பேச்சு நின்றது. மோகினிப் பதுமையென நின்றாள் பார்வதி. நேரம் சோதிக்கிற நேரத்திலே நீங்களும் சோதிச் சிடாம, சீக்கிரத்திலே நல்ல வாக்குத் தாங்க, பாரு ' பாசத்தின் வெறியில் சத்தமிட்டான் செல்லப்பிள்ளை. 'உங்க அன்பு மகத்தானது மனிதாபிமானம் மிகுந் தது!... உங்க இஷ்டப்படி நடப்பேனுங்க; இது உங்களுக்கு உண்டான கடமை மாத்திரம் இல்லே ; எனக்கு வாய்ச்