பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110


அதோ, என்னோட சொப்பனத் தேவதை ... ஆசை ஆசையாக நான், கண்ட ஏதோ ஒரு வகையிலே - வழியிலே நனவாக்கப் போறவங்களாச்சே பார்வதி ! - பதட்டத்தோடு பார்வதியை வரவேற்றான் செந்தில். உணர்ச்சிப் பிழம்பாக நின்றாள் பார்வதி ! - தீப் பிழம்பில் கோலவிழிகள் சிரிக்கின்றன ; இதழ்களுக்கும் சிரிக்கத் தெரிந்திருந்தது ; இளமையின் கவர்ச்சியில் பொலிந்த அழகான மார்பகம் அழகாகவே எம்பி எம்பித் தாழ்கிறது. பூவும் பொட்டும் மங்கலம் பாடின. தன் தாய் தந்தையரின் பாசச் சூழலிலே நின்று கொண்டிருப் பதாகவே அவள் உணர்வு அப்போது அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் நெற்றியில் நெளிந்த பூ விரல்கள் கழுத்திற்கு ஒடி வந்ததுதான் தாமதம் ; அவளுக்குச் சுருக்கென்றது ! - இந்நேரத்துக்கு என் கழுத்துச் சங்கிலியாச்சும் அடகுக்குப் போகாமல் என் கையிலேயே மிஞ்சியிருந்திருந்தா, ந ல் லா இருந் திருக்குமே ? ... பூவிரல்கள் பூச்சிதறலாக நடுங்குகின்றன. செந்திலுக்குச் சூட்சுமம் அதிகம். பார்வதியை நெருங் கினான். ஏதோ இனம் புரியாத உரிமையின் உறவில் அவனுள் அமைதி கனிந்தது. 'காதலுக்காக முடியை மட்டுமல்லாமல், உயிரையும் துறந்தவங்களைப் பற்றியே சதா நினைச்சுட்டு இருந்தவன் நான் ; அதனாலேதான், கல்யாணம்னா ஒரு தாலி வேணுமே என்கிற சாதாரண மான உண்மையைக் கூட நான் மறந்து போயிட்டேன் ! நான் தேடினது கிடைச்சிருந்தா, ஒரு தாலியும் என்னைத் தேடி வந்திருக்கும் ! ... சரி, சரி ! ... இந்தாங்க, செயின் ! போட்டுக்கங்க, பாரு ' என்றான். பூ முகத்தில் பூவிழிகள் பன்னீர் தெளித்திருக்கக்கூடும். செந்தில் மாலையும் கழுத்துமாக, அசல் மாப்பிள்ளை யாகவே தோன்றுகிறான். ஜரிகைத் துப்பட்டாவைச்