பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


தெய்வத்தை நம்புகிறவன் ; நம்பிக்கிட்டும் இருக் கிறவன் !' - அப்பாவிற்கு வாக்கிலோ, நாக்கிலோ சனி யாம் ! - சொன்னால் பலிக்குமாம் சொன்னதும் பலிக்கு மாம் ! அம்மாவின் நம்பிக்கை இது அவள் பெருமூச் செறிகிறாள் ஊதல் காற்று பார்வதிக்குத் திடீரென்று கூதல் நடுங்கியது ; எண்ணங்களின் சிலிர்ப்பில் கூதல் சிலிர்த்திருக்கலாம், இப்போதெல்லாம் இப்படித்தான் அவளுக்கு அடிக் டி உடம்புக்கு வந்து விடுகிறது. என்ன செய்வது ? -- அவள் ஒருத்தி சம்பாதித்தால்தான் உண்டு ; இல்லா விட்டால், நான்கு ஜீவன்களும் பட்டினிதான் ! சோதிப்பு கள் ஒன்றா, இரண்டா ? கஷ்ட நஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா ? இந்த லட்சணத்தில் அவள் வரதட்சணைக்கு எங்கே போவாள் ?... அவள் எங்கேயும் போக மாட்டாள்; அவள் அவளுக்குள்ளே தான் இருப்பாள் ! - அவள் மனம் அப்படி , தவம் அப்படி , வைராக்கியம் அப்படி அவள் சிரித்தாள் ; மனம் விட்டுச் சிரித்தாள் ; வாய்விட்டுச் சிரித்தாள் ஒ மை குட்னெஸ்...' ஈரம் கசிந்தது ! ஈரத்தின் கசிவிலே பெருமை இருந்தது ; கசிவின் ஈரத்திலே பெருமிதமும் இருந்தது. சுவர் அலமாரியில் டைம்பீஸ்' வீரிட்டது. மணி ஐந்து. தலைவாசலில் வந்து நின்றாள் பார்வதி. மலர்ந்தும் மலராத விடிகாலைப் பொழுதின் அமைதியான இயற்கை யின் எழிலை ரசிப்பதென்றால், அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும் ; மனத்திற்கு ஒர் ஆறுதல் கிடைப்பதும் வழக்கம். இப்படிப்பட்ட ரம்மியமான நேரத்திலேதான் அன்றைக்கு ஒரு நாள் அவள் செந்தில் என்கிற அந்தப்