பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


பணக்காரப் பிள்ளையை முதன்முதலிலே சந்தித்தாள்!'இந்தச் செந்தில் உண்மையிலேயே நல்ல பிள்ளை தானோ ?- பார்வதி விதியிடமா விடை கேட்கிறாள்?... மகாலட்சுமித் தெரு இன்னமும்கூட வெகு நிதான மான அமைதி கொண்டு காட்சியளித்தது. இப்போது அவளுக்கு ஆபீஸ் நினைவு வந்து விட்டது. பரபரப்பு அடைந்தவளாக. வீட்டு அலுவல் களைக் கவனிக்க இரண்டாம் கட்டில் அடியெடுத்து வைத்தாள். அதற்குள் : குழாயில் கார்ப்பரேஷன் தண்ணிர் கருணையே வடிவெடுத்துக் கசியத் தலைப்பட்டது. விஷமப் புன்னகையில் சுதாரித்துக் கொண்டாள் பார்வதி : அடுப்படிக்கு விரைந்து எவர்சில்வர் குடத்தைக் கழுவி எடுத்து வந்து குழாயடியில் வைத்தாள் : சுதந்திர மான சுகம் அவளை அனைத்தது. போட்டி இல்லாத தொரு தனிச்சுகம். தியாகராயநகர்ப் பகுதியில், இப்படிப் பட்ட வசதி வாய்ப்புகளுடன் தனிவீடு அமைந்ததென்பது அதிர்ஷ்டவசமான காரியம்தான். நாட்டிலே நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட புதிதில் கிடைத்த வாடகை வீடு அது. ஒரு காலத்தில் அப்பாவின் சமர்த்து கொடி கட்டிப் பறந்ததென்னவோ பொய் இல்லைதான் ! குழாயை அடைத்தாள் ; நிரம்பி வழிந்த குடத்தை இடுப் பில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்தாள். கூடத்தில் இறக்கி வைத்தாள். சின்னத்தட்டை எடுத்து மூடினாள். அருகில் தம்ளரையும் வைத்தாள் - சின்னப்பயலுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும், குடத்தை இங்கே வைத்தால் தான் அவனுக்கு செளகரியமாக இருக்கும். இதுவும் பார்வதி செய்த ஏற்பாடுதான். இந்த குடத்திலே தண்ணீர் மட்டுந்தான் நிரம்பியிருந்ததா? . . .