பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 முதியவரும் மூதாட்டியும் புதுமணத் தம்பதிக்கு ஆசி வழங்கினர்!... வெளித் தாழ்வாரம், "செந்தில், எனக்கு நேரமாச்சுங்க!' 'எனக்குக்கூட நேரமாச்சுத்தான், பார்வதி சரி, புறப்படுங்க ' ஒஹோ மாதங்கி அழைத்தாளே?... "ஆகட்டுங்க ; போட்ட வேஷத்தைக் கலைச்சிட்டு, இதோ ஒரு நிமிஷத்திலே வந்திடறேனுங்க!' என்று சொல்லிச் சென்றவள், சொன்ன பேச்சுப்படி திரும்பி வந்தாள். கைப்பிடியில் பட்டுப் புடை வை, சோளி, கழுத்துச் சங்கிலி, மாலை எல்லாமே இருந்தன. :"இந்தாங்க!' என்று நீட்டினாள் பார்வதி. "இதுகளை நான் வச்சிட்டு என்ன செய்யப் போறேன்?' 'நான் மாத்திரம் இதையெல்லாம் வச்சுக்சினு என்னங்க செஞ்சிடப் போறேன்?' செந்திலுக்கு முகம் சிறுத்தது. சற்றே நகர்ந்தான். சிகப்பு நிறத்திலே எச்சரிக்கை செய்த பொத்தானை அழுத்தினான். பார்வதிக்கு இருப்புக் கொள்ளவில்லை, அங்கே, செந்தில் ஏதோ சிந்தனையில் நெற்றியைத் தேய்த்துக் கொள்கிறான். இரண்டு கோப்பைகளிலே காப்பி வந்தது.