பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கண்மணிப் பதிப்பகம் ! மி ன் கா ற் று பட்டமாத்திரத்தில், பார்வதியின் உள்ளமும் உடம்பும் இதம் அட்ைந்தன. அடையாறு பங்களாவில் ஒரு மணி நேரத்திற்குள் நடந்து முடிந்த - நடத்தி முடித்த - ஜீவநாடகத்தை கெட்ட தொரு கன வாகவே அவள் நிமிஷங்களைக் கூடச் சொந்தப் படுத்திக் கொள்ள மாட்டாள். மேஜைமீது வட்டியும் முதலுமாக அலுவல்கள் அம்பாரமாகக் குவிந்து கிடந்தன! விற்பனை யாளர்கள் என்கிற பெயர் பொருத்தமாகத்தான் இருக் கிறது !.--கடனுக்கு வாங்கின புத்தகங்களை ரொக்கத்துக்கு விற்பனை செய்யும் இவர்கள் பணத்தைப் பதிப்பகத்திற்கு அனுப்ப மாட்டார்களோ ? எதிர்ப்பக்கம் முதலாளியின் அறையை எட்டிப் பார்த்தாள். அழைப்பு வரவே எழுந்து நடந்தாள். 'இப்பத்தான் வர்றிங்களா, பார்வதி?-உங்கஃப்ரண்ட் செந்தில் உங்களுக்கோசரம் ஃபோன் பண்ணினார். உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நித்தியகண்டம் பூரண ஆயுசு கணக்கிலே இப்படியே மாறி மாறி உடம்புக்கு வந்தால், பாவம், நீங்க ஒண்டியாய் என்னதான் செய்வீங்க ? இப்ப தேவலாமா ?” பார்வதி தலையை உலுக்கினாள். 'நல்லவேளை அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்திலே நோய்நொடி வராதவரை, உங்க பாடு யோகந் தான்! நல்லவங்களைத்தான் பகவானுக்குச் சோதிக்கத் தெரியும் !' -