பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


செந்தில் வந்தவுடன் தன்னை வீட்டில் வந்து உடனடி யாகச் சந்திக்கச் சொல்லும்படி பெரியவரிடம் கேட்டுக் கொண்டாள்; “அவசரம், ரொம்ப ரொம்ப அவசரம்' என்றும் நினைவு படுத்தினாள். வீட்டுக்கு வந்துதான் அவள் மூச்சுவிட்டாள். - அம்மாவும் அப்பாவும் மயிரிழை கூட ஆடாமலும் அசையாமலும் மெளனமான உயிர்ப்பிண்டங்களாகக் காட்சி தந்தபடியே, ஜீவ மரணப் போராட்டத்தை இன்னமும்கூட நடத்திக் கொண்டுதான் இருக்கின் றனர் :- இவர்கள் இரண்டு பேருக்கும்தான் எத்தனை ரோஷம், வீம்பு வைராக்கியம் !... மணி : 2-20 டாக்டர் வைத்த கெடு நெருங்கிக் கொண்டிருந்தது!. நிற்கவோ, நிலைக்கவோ நேரம் ஏது ? உயிர்க் கழுவில் துடித்தவளாக உட்புறம் விரைந்தாள். கலவர மான சத்தங்களுக்கு நடுவில், அவள் தேடியவை இரண்டுமே சோதனை நடத்தாமல் கிடைத்தன ! ஒன்று; காஞ்சிபுரம் பட்டுச் சேலை சன்னமான ஜரிகை போட்டது; எலுமிச்சை நிறம். இரண்டு. மஞ்சள் துணுக்கு முடிந்த தாலிக்கயிறு ! வெளிப்புறம் திரும்பினாள். ‘வாழ்க்கையோட விதியும் வினையும் வேடிக்கையாகத் அமைஞ்சிடுது கமலி தன்னோட கல்யாணத்துக்காக எனக்கு எடுத்துத் தந்தது இந்தப் பட்டு ; மஞ்சள் தாலிக் கயிற்றை ஒருசமயம் அறுபத்து மூவர் திருவிழாவிலே விளையாட்டாக ஐம்பது காசு கொடுத்து வாங்கினேன்!” ஈரம் அவள் அப்போது அணிந்திருந்த எலுமிச்சை நிறச் சோளியிலும் வழிந்தது. கணங்கள் பேய்க் கணங்களாக உருமுகின்றன.