பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


உதவியை நான் உயிருள்ள வரையிலும் மறக்கவேமாட் டேன். உங்களுக்கு இந்த ஜென்மத்திலே நான் என்ன கைமாறு செய்யப் போறேனோ, தெரியவே இல்லீங்க !' செந்திலின் பேச்சை நினைத்தாள். போன உயிர் திரும்பின மாதிரி தோன்றிய ஆறுதலான ஒர் அமைதியை அவளால் உணர்ந்திட முடிந்தது. தாய்தந்தையாரை மீண்டும் ஒரு தரம் பார்த்தாள். தொட்டும் பார்த்தாள் அழுகை பீறிட்டது. அப்பாவும், அம்மாவும் ஜோடியாகவே சித்து விளை யாட்டுப் பயின்றவர்கள் மாதிரி, இன்னமும்கூட மூச்சை அடக்கிக் கொண்டு உயிர்ப் பிணங்களைப் போலவே காட்சியளிக்கின்றனர் ! - 'கடலே கதி யென்று எதிர்ப்பங்களாவுக்கு ஓடினாள் பார்வதி. தொலைபேசியில் செந்தில்நாதனோடு தொடர்பு கொள்ள எண்ணி எண்களைச் சுற்றினாள். செந்தில் பேச வில்லை. அவனுடைய தகப்பனார் பேசினார். அவளுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. செத்துக் கொண்டி ருந்தவர் பிழைத்து விட்டாரா ? தெய்வமே !- எங்க மருமகப் பொண்ணு பார்வதிதானே ? செந்தில் பையன் எங்கேயோ அவசரம்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே போயிட்டான், கல்யாணம் கழிஞ்சதும் கழியாததுமா எங்க கையிலே சொல்லாமல் கொள்ளாமல்கூட அதுக் குள்ளாற என்னம்மா உங்க வீட்டுக்குப் போயிட்டே ? பொழுது படுறத்துக்கு முந்தியே இங்கே உன் வீட்டுக்கு பங்களாவுக்கு வந்திடு, தாயே ! மகாலட்சுமியான உன்னைப் பத்தி ரொம்ப ரொம்பப் பெருமையாகச் சொன்னான் உன் புருஷன்! - உன்னை ஆசை தீர நல்லாப் பார்த்துச் சந்தோஷப்படுறதுக்காக நானும் உன் மாமியாரும் துடியாய்த் துடிச்சுச்கினு இருக்கோம்,' என்றார்! - பேச்சைத் திசை திருப்பினாள் பார்வதி.