பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


அன்றைக்கே மயிலாப்பூர் பிள்ளையானுக்கு வாழ்க்கைப் பட்டு, நான் மாலையும் கழுத்துமாக அவர்கள் முன்னிலை யிலே தோன்றியிருந்தால், அவர்களுக்கு இப்படிப்பட்ட விதி எழுதிப்போட்டிருக்காதோ ? - பார்வதி குமுறிக் குமுறி அழுதாள் ; புலம்பினாள் ! - தர்மத்தையும் சட்டத்தையும் விதியையும் மீறிக்கிட்டுச் சமூகத்திலே பேயாட்டம் போடுற வரதட்சணைக் கொடுமைக்கு நேர் முகமாக பலியாகிடப்படாதேன்னு நான் நினைச்சிருந் தேன்; ஆனா, அதே வரதட்சணைப் பிரச்னையே அப்பா வையும் அம்மாவையும் மறைமுகமாக இப்ப பலிவாங்கிக் கிட்டு இருக்குதே ? எனக்கு மட்டும் கடுகத்தனை நல்ல திர்ஷ்டம் இருந்திருந்தா, இது மட்டும் என்னைப் பெண் பார்க்க வந்த எத்தனை எத்தனையோ மாப்பிள்ளை களிலே ஒருத்தராச்சும் எனக்காகவும் என் அன்புக்காகவும் மட்டுமே என்னைக் கலியானம் கட்டிக்கிட சம்மதிச்சிருக்க மாட்டாரா ? நெஞ்சு வெடித்துவிடவில்லைதான் ! வெள்ளைப்பூனை சுற்றிச் சுற்றி வலம் வருகிறது. பெற்றவர்களின் பாதக் கமலங்களில் அடைக்கலக் காதை படித்தான் ராமையா. பார்வதிக்குச் சித்தம் பேதலிக்கப் போகிறதா, என்ன தெய்வத்தையும் தெய்வங்களையும் சபித்தவளின் இருதயத் திலே என்னவோ சுருக்கென்று தைக்கவே, விழிப்படைந் தாள் ; ஒருவேளை, நான் இப்ப, இந்த நிமிஷத்திலே அப்பாவும் அம்மாவும் கண்பார்க்க நான் தாலியும் மாலை யுமாக கலியாணக் கோலத்திலே காட்சி தந்தால், ஒரு வேளை அவங்க ரெண்டுபேரும் ஒன்று போலவே மறுபிறவி எடுத்திடுவாங்களோ ? ம ன த் தி ன் அடிவானத்தில் என்னவோ ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மின்னியது மேனியின் சிலிர்ப்பு தொடர்க்காவியம் ஆனது. செந்திலை நினைந்தாள் ; பார்வதி, ஆபத்துக்கு மனசொப்பியும் மனசு இரங்கியும் எனக்கு நீங்க உதவினிங்க...உங்களோட