பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


வும் முடியாது. 'எனக்குக்கூட அதிர்ஷ்டம் என்கிற ஒண்ணு இருக்குத்தான் போலே -நன்றி சொல்ல ஒரு தெய்வ மாச்சம் இருக்கே ?-அலைகளின் ஆர்ப்பாட்டம் சகிக்க வில்லை ! பாட்டி வெடிகுண்டைத் தூக்கிப் போடுகிறாள் ! விட்டகுறையும் தொட்ட குறையும்போல, அம்மாவுக் கும் அப்பாவுக்கும் எழுதி வைத்த மாதிரி நாடித்துடிப்பு சிலேட்டுமம்' பேசி அடங்கிக் கொண்டே வருகிறதாம் !... வந்த டாக்டரும் கைகளை அகலமாக விரித்தார் ; ஆனாலும், இருவரும் தம்பதி சமேதராகப் பிழைத்தால் மறு பிழைப்புத்தான் என்ற மனித அபிமானத்தில் ஆளுக்கு ஒர் ஊசியைச் செலுத்தினார் : இன்னும் மூன்றே முக்கால் நாழிகை கழிந்தால்தான், தம்பதி சமேதராகவே நெஞ்ச டைப்பு நோய்க்கு ஆளான அப்பா-அம்மாவின் உயிர் களுக்கு உண்டான தீர்ப்பைச் சொல்லமுடியும் என்றார்; விதிக்கு மருந்து கிடையாதெனவும் கூறினார். அவர் கடன் பணி செய்து கிடப்பது -போயே விட்டார். பிற்பகலில் கூட, சூடு தணியவில்லை. பார்வதி எதை நினைப்பாள்? எதை மறப்பாள் ? எதைத்தான் மறுப்பாள் ? நம்ப பாருக் குட்டியைத் திருமணக் கோலத்திலே தாலியும் மாலையுமாய் நாம ரெண்டு பேரும் பார்த்தால்தான், நம்ம ரெண்டு பேர் ஜீவனும் நம்மளோட உடம்பிலே நல்லலபடியாய் நிலைக்குமாக்கும் ! என்று அம்மாவும் அ ப் பா வு ம் நித்த நித்தம் செத்துச் செத்துப் பிழைத்த நெருக்கடி நிலைமையிலேயும் ஒருவருக்கொருவர் ஒரு நாளைக்கு ஓராயிரம் தடவையாகிலும் பகிரங்கமாகவும் ரகசியமாக வும் எச்சரிக்கை செய்து கொண்டார்களே ஒருவேளை, அவர்கள் போட்ட புள்ளிக் கணக்குப் பிரகாரம்