பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.இ பறந்து வந்த டாக்ஸி-டிஎம்எஸ் 3.089, பறந்து விடாமல் நிற்கிறது ; துட்டு கைக்கு கிடைத்து கையோடு பறக்கிறது. உள்ளே பாய்ந்தாள் பார்வதி. ஆத்மநாதனும் சிவகாமியும் சுரனை தவறிய நிலை யிலே, பாயும் படுக்கையுமாகக் கிடந்தனர். நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்த பாச வெள்ளத்தில் சிக்கித் தடுமாறிக் கரைசேர மாட்டா மல் தவித்தும் ஏங்கியும் உருகியும், போராடிக்கொண்டே பெற்றோர்கள் இருவரையும் மாறி மாறி, மாற்றி மாற்றிப் பார்த்தாள் ; பார்த்துக் கொண்டேயிருந்தாள். ராமையாவின் விம்மலும் நிற்கவில்லை. "அப்பா !” என்று வீரிட்டாள் ; தொடர்ந்து 'அம்மா ' என்றும் அலறினாள். என்ன அநியாயம் ! அப்பாவும் சரி, அம்மாவும் சரி, அசையவில்லை ! அசைத்து கொடுக்கவும் இல்லை. அதே மகாலட்சுமித் தெருவின் தென்கோடியிலிருந்த ஸ்கூலிலிருந்து யதேச்சையாக தண்ணிர் குடிக்க வீட்டுக்கு வந்தது நல்லதாகப் போயிற்று. விதி, இல்லை, இல்லை, தெய்வம்தான் அவனை அந்நேரத்தில் இங்கே அனுப்பி வைத்திருக்கிறது இல்லாவிட்டால், விவரம் தெரியாமல் போயிருக்கும்; அப்பா அம்மாவை உயிரோடு பார்த்திருக்க