பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ஆஹா ... தேடி வருகின்ற தெய்வமாகத் தெய்வமனிதன் ஒருவன் மனம் இரங்கியவனாகக் காரிலிருந்து இறங்கி வருகிறான். ஜரிகை வேட்டியும் பட்டுச் சட்டையும் இன்னமும் பளபளக்கின்றன - காலம் கெட்ட இந்தக் கலிகாலத்தில், மனிதர்களையும் தரிசிக்க முடிகிறது ? டால்ஃபின் தளதளக்கிறது ! "செந்தில், வந்திட்டீங்களா ?” வந்திட்டேனே !' அழுகையை மறந்து சிரித்தாள் பார்வதி; மனம் திறந்து சிரித்தாள் ; வா ய் திறக்காமலும் அவள் சிரிப்பாள் : இப்போது, முதல் முறையாக அவனை ஏற இறங்கப் பார்த்தாள். செந்தில், என்னைக் கண்டதும் பயந்திட்டீங்களா ? உங்க முகம் வெளிறிப் போயி ருக்குதே ?' என்று விசாரணை நடத்தினாள். சரி, சரி. வெட்கப்படாமல் நல்ல பிள்ளையாக நில்லுங்க. ஆமா, நெற்றிக்குச் சிகப்புக் குங்குமம் இட்டுக்கிடுற பழக்கம்கூட உண்டா உங்களுக்கு ? பாவம், அங்கே அவசரத்திலே கோணல் மாணலாக இட்டுக்கிட்டு ஒடியாந்திருக்கீங்க ' என்று பேச்சைப் பின்னினாள். - முகத்தை எத்தனை தடவைதான் துடைத்துக் கொள்வான் அவன் ? வேர்வை நேரம் காலம் புரியாமல் இப்படியும் ஆடிப் புனலாக ஒடி வருமா ? என்னவோ சிந்தனையில் எங்கேயோ வெறித்தவன், சடக்கென்று திரும்பி, பார்வதி, அங்கே ஒரு மாட்டுத் தொழுவம் இருந்திச்சுது இல்லையா ?' என்றான்.