பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


"பரவாயில்லையே? ஞாபகம் வச்சிருக்கீங்களே ! அதுக்கு இப்ப தேவைஇல்லை; பிரிச்சுப் போட்டாச்சுங்க!', 'அடடே !' - பச்சாத்தாபம். இருந்திருத்தாற் போலச் சிரித்தவள், இருத்திருந்தாற் போலே, விம்மினாள் ! ரோஜாப்பூ என்றால் செந்திலுக்குக் கொள்ளை ஆசை ஆயிற்றே இப்போது மறந்து விட்டானே ? - 'பாரு என்று விளித்துப் பதறினான் செந்தில் அழகான முகம் வெளிறிக் கிடந்தது ! அப்போது, இரண்டு மாலைகளும் இரண்டு கைகளு மாகத் தோன்றிய முருகையன், புன்னகையுடன் செத்திலுக்கு சல்யூட்' மரியாதையைச் செலுத்தினான். பார்வதி பதட்டமும் பரபரப்பும் அடைந்தாள் ; 'செந்தில் ! நீங்க உங்க வீட்டிலே, ஊகூம், பங்களாவிலே இரண்டு மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட ஒரு ஜீவ நாடகத்தை எனக்குக் காண்பிச்சீங்க : இப்ப நான் என் பங்களாவிலே, ஊகூம், வீட்டிலே அதே அச்சான இரண்டு மானுடப் பிண்டங்கள் சம்பந்தம் கொண்ட ஒருஜீவிதக் கூத்தை உங்களுக்குப் காட்டப் போறேனுங்க என் பின்னாலே வாங்க !' என்றாள். தம்பிமார்களையும் கூப்பிட்டுக் கொண்டாள். நடை வளர்கிறது. ஏழைமை பூத்துக் குலுங்கிய மிகச் சிறிதான நடுக் கூடத்திலே, மிகப் பெரிதான மனித உயிர்ச் சடலங்கள் இரண்டு : ஜோடி சேர்ந்த நிலையிலேயே விதியாலோ வினையாலோ நெஞ்செலும்புகள் நொறுங்கிட அடித்துப் போடப்பட்ட மாதிரி, பேச்சு மூச்சு இல்லாமலும் நெஞ்ச டைப்பு நோயும் கிழிசல் பாயுமே கதியென்றும்