பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


கொண்ட உண்மையான ஒருமனிதன் எனக்குத் தாலிகட்டப் போறதையும் பார்த்துப் பரமானந்தம் அடையவாவது உங்களோடு கண்கள் திறக்கப் படாதா ?' அலறினாள் ; கதறினாள் ; பதறினாள். பலன் : பூஜ்யம் ஆனாலும், திருவாளர் ஆத்மநாதனுக்கும் திருமதி ஆத்மநாதனுக்கும் இவ்வளவு வைராக்கியம், வீம்பு, ரோஷம் கூடவே கூடாது ! மறுகணம் - பார்வதி வெறிமூண்டு உள்ளே பாய்ந்து, பூஜைஅறைப் படங்கள் அத்தனையையும் வெளியே சுமந்து வந்தாள். "என்னை பெற்ற புண்ணிய ஆத்மாக்களோடு நெஞ்சை நெகிழ்ந்து இளகச் செய்யாத எந்த ஒரு தெய்வத்துக்கும் இந்த வீட்டிலே இடம் கிடையாதாக்கும் ' சத்தியக் குரல் எழுப்பிக் கொண்டே, எல்லாத் தெய்வங்களையும் அப்படியே தரையிலே போட்டு உடைத்தாள். தெய்வங்களின் குரல்கள் மண்முட்டி விண்முட்டி யிருக்க வேண்டும் ! செந்தில் வியப்பு மேலிட, 'பாரு அங்கீட்டுப் பாருங்க உங்க அப்பா அம்மாவோட கண்கள் திறந்து விட்டன !' என்று கூவினான். பாருக்குட்டி ஆனந்தத் தாண்டவம் ஆடினள். பார்வதிக்குத் தெரியாத கூத்தா? - பெற்ற தாயையும் தந்தையையும் உற்ற பாசத்தோடும் பரிவோடும் தொடுத்த விழிகளை எடுக்காமல் பார்த்தாள் ; அவர்கள் இருவரை யும் விழுங்கி விடுகிற பாவனையில் மாறிமாறியும் மாற்றி மாற்றியும் அப்படிப் பார்த்தாள். 'அம்மா !” என்று