பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


கூவினாள் : அப்பா' என்று கூப்பிட்டாள் ! - "நீங்க ரெண்டு பேரும் என்னை - உங்க பாருக்குட்டியை மாலை யும் கழுத்துமாகப் பார்க்கவேணும்னு காலம் காலமாக ஆசைப்பட்டிங்க... அதுக்காகவேதான். நான் இதோ மாலையும் கழுத்துமாக வ ந் து நிற்கிறேன். அன்பாக எனக்காக என்னோட பரிசுத்தமான அன்புக்காகவும் என்னை மனப்பூர்வமாகவும் சுத்தமான மனசாலேயும் நேசிச்ச பெரிய இடத்தைச் சேர்ந்த உயர்ந்த உண்மை யான ஒரு நல்ல பிள்ளையை மாப்பிள்ளையாகவும் ஏற்றுக் கிட்டேன் ; இந்தாப் பாருங்களேன்... அவர் என் பக்கத் திலேயே ஒற்றைக் காலிலே தவம் செஞ்சபடி நின்னுக் கிட்டிருக்காருங்களே !... பார்த்தீங்களா, அப்பா ? பார்த் திட்டியா அம்மா ?” - ஆனந்தமாக ஆடினாள், கூத்தாடினாள் பார்வதி. ஆத்மநாதனும் சிவகாமியும் திறந்த கண்களை மூடாமல் அன்புத் திருமகளைப் பார்த்தார்கள்; பார்த்துக் கொண்டிருந்தார்கள் ? கதிர் முத்தங்கள் இருவருக்கும் முத்தம் கொடுத்த வண்ணம் இருந்தன. செந்திலை அழைத்தாள் பார்வதி. நெருங்கி வந்தான் செந்தில், 'முகத்தில் சுரத்து இல்லாமல் என்னவோமாதிரி நிற்கிறீங்களே, செந்தில் ஒண்னும் விசேஷம் இல்லையே நீங்க இப்ப இந்த எளிய வீட்டுக்கும் பணக்கார மாப்பிள்ளை என்னோடு நல்லா ஒட்டிக்கினு நில்லுங் களேன்!” என்று குதுகலத்தோடு சொல்லிக்கொண்டே, இடுப்பிலே ஒளித்து வைத்திருந்த மஞ்சள் தாலியை எடுத்துச் செந்திலிடம் சமர்ப்பித்தாள். அவனுடைய தளிர் விரல்கள் அவளது பூ விரல்களைத் தீண்டியிருக் கலாம். அவள் மறுகணத்தில் திகைத்தாள். அவனுடைய தே-9