பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I36 'வாஸ்தவந்தான் ; நான்தான் இப்போ உங்களைச் சோதிக்கிறேன், மிஸ் பார் வதி !” 'நான் ஒண்னும் மிஸ் பார்வதி இல்லீங்க, செந்தில்!நான் யார் தெரியுங்களா ?. நான்...நான் மிஸஸ் பார்வதி செந்தில்நாதன் ' கம்பீரமான விம்மலுடன் தொடர் ந் தாள் : சாவோட சந்நிதானத்திலே உயிருக்கு மன்றாடிக் கிட்டிருந்த என் அப்பா-அம்மாகிட்டே மாலையும் கழுத்து மாக உங்க பக்கத்திலே மணக்கோலத்திலே நின்ன நான் கொடுத்த அந்தச் சத்தியவாக்கிலே இன்னமுமா உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் போயிடுச்சு?... செந்தில் ! நீங்க எப்போதுமே இனி என்னோட செந்தில்தானுங்க : இந்த ஒரு விஷயத்திலேயாச்சும் என் இஷ்டப்படியே நான் அதிர் ஷ்டக்காரியாக ஆகியிருக்கேனே, அதுவே போது முங்க !' 'பாரு! பாருக்குட்டி!' உணர்ச்சிகள் புதுவெள்ளமெனச் சுழித்திடப் பார்வதியை அப்படியே வாரியெடுத்து நெஞ்சோடு நெஞ்சாகவும் உயிரோடு உயிராகவும் அணைத்துக் கொண்டு கட்டுக்குள் அடங்காத ஆனந்தக் களிப்போடு விம்மி வெடித்தான் செந்தில். பார்வதிக்கு மட்டும் விம்மி வெடிக்கத் தெரியாதா என்ன ? சுகமான ராகம் சுகமாகவே விளையாடுகிறது. இப்போதாகிலும், செந்தில் ஆசை தீரப் பேசியாக வேண்டும்... "பார்வதி போன வருஷத்திலே நடந்த அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டியிலேதான், நான் உன்னை முதன் முதலாகக் கண்டேன் ! உன் பேரிலே கொண்ட காதலையே முதல் காதலாகவும் கடைசிக் காதலாகவும்