பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


முதல் மரியாதையோடு மதிச்சும் நம்பியும் நான் நல்ல காலத்துக்காகத் தவம்இருந்தேன்; விதி செஞ்ச பிழையினா லே, நான் இப்படிப்பட்ட பெரிய இடத்துப் பிள்ளையா ஏன் பிறந்தேன்னுகூட சமயங்களிலே என்னை நானே நொந்துக்கிட்டதும் உண்டு !-நான் சீமான்மகன் தான் ; ஆனாலும், ஏழை பாழைங்கதான் என்னோட உலகமாக வும், எனக்கு உலகமாகவும் இருந்து வர்றாங்க ; இது சத்தியமான உண்மை. இதைப் பட்டணத்துப் பணக்கார வட்டாரம் பூராவுமே அறியும் சரி, விஷயத்துக்கு வந்திடுறேன். பெரிய இடங்கள் எல்லாத்திலேயும் பெரிய பிரச்னையாவே இருந்துக்கினு வருற வரதட்சணை கொடுமைக்கு நானும் விலக்கு விதியாக இருக்க மாட் டேன்னு கருதியோ என்னமோ, உன் பேரிலே மாற்ாத உள்ளன்பை வச்சுக்கிட்டிருந்த என்னையும், நான் உனக்கு அன்பான நம்பிக்கையோடு சேலத்திலிருந்து எழுதின காதல் கடிதத்தையும் நீ உதாசீனம் செஞ்சிட்டே என் றாலும் என்னோட முதல் காதல் எப்படியும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை என் மனசிலே எப்பவுமே இருந்து வந்திச்சு. அதனாலேதான், வழக்கமான என்னோட சமூக நலச் சேவைகளிலே மனசைச் செலுத்தி ஆறுதல் அடையவும் முடிஞ்சுது. இடையிலே குறுக்கிட்ட தாராவை நீயும் மறந்திடு !...இனி என்னாலே பேச முடியாது !...ஒண்ணை மட்டும் சொல்லி முடிச்சிடுறேன்; உண்மையும் தருமமுமான சத்தியத்தைத் தேடித்தேடி அலைஞ்சு திரிஞ்சுக்கிட்டு இருக்கிற எனக்கு நீயே ஒரு சத்தியமாக ஆகியிருக்கிறது. நான் இந்த ஜன்மத்திலே செஞ்ச பாக்கியம்தான் !...அன்பே வடிவமான உனக்காக வும், உ ன் ேனா ட பரிசுத்தமான அன்புக்காகவும் மாத்திரமே, நான் உன்னை என்னோட மனசாலும் உயிராலும் உணர்வாலும் சதாசர் வகாலமும் உன்னையே -உன் ஒருத்தியையே பாசத்தோடவும் பந்தத்தோடவும், ஏன் பக்தியோடவும் கூட நேசிச்சுக்கிட்டிருந்த எனக்கு இந்த ம ண் ணு க் கு ச் சொந்தம் கொண்டாடுற