பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141


சமூகப் பண்பாட்டின் பேராலேயே குத்திக் கொன்றவனும் நானே தான் !... "... செந்தில்நாதன் வாக்குமூலம் கொடுத் தான். பார்வதி கூக்குரல் எழுப்புகிறாள் : 'ஐயையோ ...நடந்த நாடகம் போதாதா ?...அட, பாழுந் தெய்வமே !' சட்டம் கண் சிமிட்டுகிறது. கண் அமர்த்துகிறான் செந்தில். 'என்மாதிரி நீங்களும் உண்மையான ஒரு மனிதரானால், இன்னம் ஒரு பத்து நிமிஷம் எனக்காகக் காத்திருங்க. கொஞ்சம் முந்தி நான் தாலி பூட்டி, எனக்கு அருமையாக மனைவியாக ஆன பாக்கியவதி இவள், பேர், பார்வதி ! தமிழ்ப் பார்வதி இவள் , தமிழச்சி பார்வதி இவள் !-அங்கே பார்த்திங்க தானே? சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்திலே நோய்க்குப் பலியான அவங்க ரெண்டு பேரும்தான் என்னோட பார்வதியைப் பெற்றவங்க ' -செந்திலுக்கு விவேகம் கூடுதல் கூடுதலான அக்கறையோடு பார்வதியின் திசைக் குக் திசை திரும்பினான் அவன். 'நல்லவிளக்கு இன்னமும் கூட எரிந்து கொண்டிருக் கிறது. பார்வதிக்குத் திரும்பவும் சொல்லுகிறான் செந்தில்; 'பார்வதி ! இப்போதைக்கு நான் சட்டத்தின் குற்ற வாளிதான் ; ஆனாலும், உண்மையான நடப்பை நீயும் தெரிஞ்சுக்க வேண்டாமா ? சமூக சேவகி என்கிற பொய்யான சமூக அந்தஸ்தை நிழலாக்கிக்கினு, திரை மறைவிலே விபச்சார விடுதி ஒன்றையும் ரொம்பக் கால மாக நடத்திட்டு வந்த மாதங்கியைப் பற்றி நம்ம முருகையன் மூலம் உனக்குத் தெரிஞ்சிருக்கும் மாதங்கி