பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


அவளுக்கு அழத் தெரியவில்லை. "அதோ பார், பார்வதி ...கேள்வி வருது !' ஆச்சரியக் குறியாகக் காவல் துறை அதிகாரி வந்தார்; நின்றார் "வணக்கங்க,' என்றான் செந்தில், நான்தான் பிரபல பாங்கர் பரந்தமனின் செல்வ மகன்; உங்களுக்கு ஃபோன் பண்ணினதும் நானே தான்!” சேதி சொன்னான். ரத்தம் உறைய, உருக்கத்தோடும் ஏக்கத்தோடும் செந்திலை தனக்கு தாலிப் பாக்கியத்தைக் கருணையுடன் வழங்கிய செந்திலை நன்றியுடன் ஊடுருவிப் பார்த்தாள் பார்வதி. காக்கிச் சட்டை, காலத்தைப் பார்த்தது. செந்திலோ, பார்வதியைப் பார்த்தான். "மிஸ்டர் செந்தில் ' 'ஸார், உங்களுக்குக் காலத்திலே கண் ; எனக்குக் கடமையிலே கண் - மறுபடியும் சொல்றேன் : இந்த அருமைத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பிரமாதமாகத் தொண்டு செய்கிறதாகத் தம்பட்டம் அடிச்சுக்கிட்டு, சமூகத்தோட நல்லாரோக்கியத்தையும் உயர்பண்பாட்டை யும் திரைமறைவிலே அண்டிக்கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கிட் டு வ ரு ற சமூகக்குற்றவாளிங்களிலே “சமூகத் துரோகிங்களிலே ஒருத்தியான இந்திரா நகர் மாதங்கி என்கிற போலித்தனமான பொய் வேஷதாரியான சமூக வேசியை என்னவெல்லாமோ நாடகம் ஆடி இந்தத் தமிழ் மண்ணின் பிரகாசமான எதிர்கால வளர்ச்சியையும் வாழ்வையும் முன்னேற்றத்தையும் உத்தேசிச்சுத் தமிழ்ச்