பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2苷 சோதனைதான் !... வாசலில் ஒலித்த ஜீப்பில் குழல் ஒலி கூடத்திலே எதிரொலித்தது. பரபரப்படைந்தான் செந்தில் : பார்வதியின் உஷ்ண மான உயிர்மூச்சை அனுபவிக்க ஆசைப்பட்டவனைப் போன்று, அவளை-தன்னுடைய இனிய பாதியை-தன் னுடைய அன்புப் பார்வதியை அன்போடும் ஆசையோடும் நெருங்கினான். பிறை நெற்றியில் பிசிறு தட்டிக் கிடந்த சுருள் முடிகளை நீவிவிட்டுச் செம்மைப் படுத்தினான். நெற்றியில் கலையாமலும் கலைந்து விடாமலும் அழகு காட்டிய சிவப்புக் குங்குமத்தைப் புதிய நம்பிக்கையோடும் புத்தம் புதிதான மனத் தெம்போடும் அழகு பார்த்தான். ஒழுங்கோடும் முறையோடும் நிதானத்தைக் கடைப்பிடித் தான். அவன் நெஞ்சு குலுங்கினால் என்ன ? அவன் குலுங்க மாட்டான் ; குலுங்கவே மாட்டான் :- அவளைக் கைத்தலம் பற்றினான் ! பார்வதியின் விழிகள் பிதுங்கின ; செந்திலுக்கு-என் செந்திலுக்கு என்ன ஆச்சு ?. மனமும் மனச்சாட்சியும் குலுங்கின. மெளனத்தின் ஊமைத்தனமான நாடகம் போதும், போதும் ! 'பார்வதி, விடை கொடு!" "விடை கொடுக்கவா ? நீங்க இன்னும் கேள்வியே கேட்கலையே, செந்தில் ?” அவனுக்குச் சிரிக்கத் தெரியவில்லை.