பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


அதிகாரியை அண்டினான் ; "இனி நீங்க உங்களோட கடமையைச் செய்யலாம்!” என்று அனுமதி வழங்கினான்' பார்வதிக்குத் தலைசுற்றியது. ஐயையோ செந்தில்... இனிமே, நான் எ ன் ன செய்வேன், செந்தில் ?' தலைமயிரை பிய்த்துக் கொண்டாள். செந்திலின் உயிர்-உயிரின் உயிர் அணலிலே அகப் பட்டு ரோஜாவாகத் துவண்டது. அவனால் பார்வதியின் சுடுநீரைத் துடைக்கவே இயலவில்லைதான் - பாரு நீ என்னோட பாருக்குட்டி இல்லியா ? - அழக்கூடாது ; இனிமேல் நீ அழவே கூடாது; அழுததெல்லாம் பத்தாதா? எனக்காகவும், ராமையாவுக்காகவும் நீ அழாமல் இருப்பது தான் உ சி தம். நடக்கிறதெல்லாம் நன்மைக்கேன்னு நம்பினவன் நான் ; இன்னமும் நம்புறவன் !... போனது போக மிஞ்சுறதுதான் வாழ்க்கை ! ... பார்த்தியா, பார்த் தியா ? அழாமல் சமர்த்தாக என்னை வழியனுப்பி வச்சிடு பாருக்குட்டி !' - அவளுடைய மஞ்சள் தாலியை எடுத்து முத்தம் கொடுத்தான். நிர்மலமான கண்களால் திரும்பவும் ஒருமுறை ஆருயிர்ப் பார்வதியை மிகமிக ஆறுதலாகப் பார்த்துக்கொண்டே, தன்னுடைய கழுத்துச் சங்கிலியைக் கழற்றி அதைப் பார்வதியின் கழுத்திலே போட்டு விட்டான். 'உனக்கு நான் தருகிற கல்யாணப்பரிசு இது!” என்றான். அவனுடைய உணர்ச்சிகளை ஒழுக்கத்தோடு கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியும். பார்வதி நான் வர்றேன்!” மோகினிச் சிலை எப்படிப் பேசும் ? காவல் வாகனத்தில் ஏறியவன், கீழே இறங்கினான். 'பா...ர்.வதி!' என்று விளித்தான். '"நான் உனக்குத் கொடுத்ததாட்டம், நீயும் எனக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டாமா ?. முன்பெல்லாம் ஒவ்வொரு விடியல் பொழுதிலேயும் நான் இங்கே பறந்து வந்து உன் முக