பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


தரிசனத்துக்காகக் காத்துத் தவம் இருந்து தொடுவான மாகத் தெரிந்த உன்னை தூரத்திலே இருந்து பார்த்த ஆறுதலோடு இங்கிருந்து பிரிகிற சமயத்திலே, என்னோட மனசுக்கு ரொம்பவும் பிடித்தமான ரோஜாப்பூவை நானே பறிச்சுக்கிட்டுப் போயிடுவேனே ?. ஞாபகம் இருக்குது, இல்லையா ?... இப்ப உன் கையாலே ஒரு ரோஜாப்பூவைக் கிள்ளி எனக்குத் தா. பாருக்குட்டி என்று நெஞ்சம் தழதழக்கக் கெஞ்சினான். ரோஜாப்பூப் பரிசை செந்தில்நாதனிடம் சமர்ப்பிக் கின்றாள் பார்வதி, கழுத்தில் ஊசலாடிய சங்கிலி கனக்கவே தொட்டுப் பார்க்கிறாள் ; ஆ! சங்கிலியோடு சங்கிலியாக ஊசலாடிக் கொண்டிருக்கிறது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது அந்த ரத்தச் சிலுவை!... 'பாருக்குட்டி, நான் வர்றேன்... போயிட்டு வர்றேன்!” செந்தில் எவ்வளவு அழகாகவும் அன்பாகவும் சிரிக்கிறான். கை விலங்கு அழுதது ! 'போயிட்டு வாங்க, செந்தில்!' பூவும் பொட்டும் விடை கொடுத்தன!...