பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பார்வதி இப்போது புதிதாகப் பிறந்திருக்கிறாள் அல்லவா ? ... ஆத்மநாதனும் சிவகாமியும் இன்னமும்கூட விழிப்புக் கொள்ளவில்லை ; விழித்துக் கொள்ளவும் இல்லை!... அவர்களுக்கென்ன ?- கொடுத்து வைத்தவர்கள் - அன்பான தவப்புதல்வியை திருக்கல்யாணக் கோலத்தில் தம்பதி சமேதகராகத் தரிசித்த மகத்தான அமைதியைத் தம்பதி சமேதகராகவே இன்னமும் அனுபவித்துக் கொண்டே யிருக்கிறார்கள் ! ராமையாவின் உயிர்க்காப்பாக ஓடோடி வந்து நின்றான் முருகையன். தாழ்ந்து கிடந்த விழிகளை வைராக்கியத்தோடும் ரோஷத்தோடும் உயர்த்தினாள் : தம்பி, கமலி அக்கா ராத்திரி பொழுதுக்குள்ளேயோ, இல்லாட்டி, விடிகாலம் பறவோ வந்ததும்தான் அப்பா-அம்மாவை அடக்கம் செஞ்சாக வேனும் ; அதுக்குள்ளாற, ஆக வேண்டியதைத் துருசு பண்ணிக் கவனியுங்க ? ராமையாவையும் கூடமாட உதவி ஒத்தாசைக்கு வச்சுக்கங்க, இன்னொரு சங்கதி!இன்னிக்குப் பசுமாட்டுக் கொட்டகையை நீங்க பிரிச்சுப் போடல்லியா?- அதே இடத்திலே, கொல்லைப்பக்கம்கிடக்கிற பெரிய மரக் கட்டிலை ரெண்டு பேரும் தூக்கி யாந்து போட்டுடுங்க. அங்கேயேதான். அப்பாவையும் அம்மாவையும் குளிப்பாட்டிச் சடங்குக் காரியமெல்லாம். செஞ்சு அவங்க ரெண்டு பேரையும் ஜோடியாகப் பயணம் பண்ணி வைக்கணும். மறந்திடாமல், நிஜமான ஒரு அய்யர்ப் புரோகிதராகப் பார்த்து விவரம் சொல்லிடுங்க.