பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


அட்வான்ஸ் கேட்டா, கொடுங்க ; அம்முக்குட்டி கேட்காமலே கொண்டாந்து கொடுத்த பணப்பெட்டியை அடுப்படி பீரோவிலே மேல் தட்டிலே வச்சிருக்கேன் !'பேசிக்கொண்டே முருகையனோடு நடந்தவள், வாசல் வெளிக்கு வ ந் து வி ட் ட ைத அப்பொழுதுதான் உணரலா னாள், பார்வதி. கூட்டம் குறையவில்லை. அந்தி மாலையின் வரவைப் பூமணத்தோடு அறிவித்துக் கட்டியம் கூறுகிறது பூந்தென்றல், திசை தி ரு ம் பி ய வ ள் பூகம்ப அதிர்ச்சிக்கு ஆளானாள் - அதோ, என் செந்திலோட ரோஜாப்பூ நிற 'ட்ால்ஃபின் கார் நின்னுக்கிட்டிருக்குது !... ஆ ! என்னோட செந்தில்லைதான் காணோம் !...செந்தில் ! நீங்க இந்தக் காரை உங்களுக்கு உயிர்ச் சாட்சியாய் வச்சிட்டுப் போயிருக்கீங்களா ? நீங்களே உங்களுக்குக் கையிலே விலங்கை மாட்டிக்கிட்டு, எனக்குக் காலிலே விலங்கைப் பூட்டிட்டு, மனசறிஞ்சு ஒரு பாவத்தையும் கனவிலே கூ. செஞ்சறியாத என்னை-இந்த அபலைக் கன்னியையே ஒரு பயங்கரத் தொழுவமாக ஆக்கிட்டு மாயமாய்ப் பறந்திட்டீங்களே ?...செந்தில் சமூகப் பிரக்ஞையோடே-வாழவழி புரியாமல்-வழிகாட்டப் படாமல் கெட்டலைஞ்சு தட்டுத் தடுமாறி விதியே சதம்னு நம்பி நம்பி உருகி உருக்குலைஞ்சு சாகாமல் செத்துச் செத்துப் பிழைச்சுக்கிட்டிருக்கிற என்னை மாதிரியான அபலைக் கன்னிகளுக்குச் சட்டத்துக்கும் தருமத்துக்கும் மேலான ஒரு சமூகக் கடமையைச் செய்தாக வேண்டிய ஒரு பொறுப்புள்ள சமுதாயப் பிரக்ஞையோடவே எங்கிட்டே சீக்திரமாகவே நீங்க திரும்பி வந்து சேர்ந்தாக வேணுமாக்கும் ! - அப்பத் தான், நீங்க எனக்கு விதிச்சு எழுதி வச்சிட்டுப் போயிருக் கிற அந்த விதியை-கன்னித் தொழுவமாகிட்ட எனக்கு