பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உதயம் பூமணம் சுமக்கிறது. வானொலியில் தமிழ்மணம் கமழ்கிறது. பார்வதி ஆடும் பம்பரமாக, ஆடாமல் சுழன்றாள். காப்பி குடித்து முடித்ததும். எத்தனையோ காரியங் களைச் செய்து முடித்து விட்டாள். பனகல்பார்க் சென்று காய்கறி வாங்கி வந்தாள். சுமங்கலிக் கிழவியிடம் பச்சைக் கொத்தமல்லி, கறிவேப்பிலை கொ சிறு வாங்கிய கையோடு, 'நீ மகராசியாக இருப்பாய் அம்மா !” என்கிற வழக்கமான வாழ்த்துதலையும் வாங்கி வந்தாள். முந்தானைக் கிழிசல் தெரியாமல் இடுப்பில் செருகிக் கொண்டவளாகச் சாண் அளவில் நிர்மாணிக்கப்பட்டி ருந்த நிலா முற்றத்தின் கீழ் முனையில் அரிவாள் மனையும் கையுமா அ ம ர் ந் து. புடலங்காயைப் பொறியலுக்கு நறுக்கி வைத்தாள். முருங்கக்காய், நாட்டுக் கத்தறிக்காய், வெங்காயம் எல்லாம் சாம்பாருக்குத் தயார் ஆயின, தோசை மாவு பிரச்சனையும் தீர்ந்தது. இப்போது குளியல் அறைக்குள் பிரவேசித்தாள். கதவு என்று பேர் படைத்த பிரம்புத் தட்டியை மூச்சை இழுத்தவாறு, இழுத்து மூடினாள், ஆனால் வாழ்க்கைக் கனவுகள் மாத்தி ரமே திறந்து கொண்டன. வாழ்க்கையின் சுந்தரக் கனவு களும் இந்நேரத்திலேதான் சொகுசாக நீராடும் போலும் நயமாகவும் விநயமாகவும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். வினாடிகள் நெளிந்தன. இப்பொழுது அவள் தனக்குள் தானாகவே நாணம் பூத்துக் கொள் கிறாள். விடியல் மந்தாரத்திலே தளிர் மேனியிலே குளிர் நீர் பட்டதும், மனமும் தளிர்த்திருக்கலாம். விளம்பரப்