பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


பெருமை கண்ட 'விமல் புடவையை விளம்பரப் படுத் தாமலே உதறினாள். எலுமிச்சை நிறத்தில் அழகு காட்டிய சோளியையும் ஏந்தினாள் ஏந்திழை இடுப்பில் ஈரம் சொட்டச் சொட்ட வெளியேறினாள் பார்வதி. காலைச் செய்திப் பத்திரிகை, காலை இளங்காற்றில் படபடக்கிறது. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவரின் தலை மையில் அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்று விரைவில் டில்லி சென்று பிரதமரைச் சந்திக்கப் போகிறதாம் ! அப்பாவுக்கு அவல் கிடைத்துவிட்டது. . "மியால் 1’ பார்வதி மனிதநேயம் துலங்கப் புன்னகை செய் கிறாள். அடுப்பங்கரையில் காய்ச்சி இறக்கி ஆறவைக்கப் பட்டிருந்த பாலுக்குக் காவல் இருந்தது வெள்ளைப் பூன்ை. . . . . . . . எல்லாம் பார்வதியின் வாய்ப் பாடம் ; கைப்பாட மும் கூட. வாண்டுப் பயல் ராமையா சிந்துவெளி நாகரிகத்தைக் கரைத்துக் குடித்துக்கொண்டே இருந்தான். காலம் ஒடியது. ஆனால் பார்வதி ஒடவில்லை ; வெளிப்புறக் கூடத்தில் வந்து நின்றாள். ஹைதர் காலத்தின் நிலைக்கண்ணாடி அவள் முன்னே வந்து நிற்கிறது. .