பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


பெரிதாக உயர்ந்து நிற்கிற பங்களாக்களையும்கூட விட்டு வைக்கிறதாகப் பத்திரிகை எதுவும் சொல்லக் காணோமே? வேடிக்கையான ஜனங்கள் வினோதமான சமுதாயம் ! மனித ஜாதியும் மனித சமுதாயமும் நவநாகரிகமான இந்த அவசர யுகத்துக்கு ஊடாலே நின்று நிதானிச்சு எப்பத் தான், எப்படித்தான் உண்மையாகவும் சத்தியமாகவும் திருந்தவும் சீர்திருந்தவும் போகிறதோ ?... எல்லாரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு இருக்க வேணும் என்கிற சர்வ சாதாரணமாக இயற்கை விதியை. நியதியைப் பாரதத் திருநாட்டுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவே இரண்டு காந்தியை அன்புப் பாரதம் பலி வாங்கிடுச்சு-பலிகொடுத் திடுச்சு ஈனத்தனமான பொய் வேஷதாரிங்க மலிஞ்சிட்ட தாலே, போலித்தனமாகவும் கேவலமாகவும் ஆகிக்கிட்டு இருக்கிற அருமையான இந்தத் தமிழ்ச்சமூகம் பாடம் கற்றுக்கிட இன்னும் எத்தனை காந்தி தேவைபடப் போகிறதோ ? பிரக்ஞையின் ஆற்றாமையில் அவள் கண்கள் திறந்தன. "கொஞ்சப் பொழுதிலே நான் எங்கேயோ போயிட்டேனே ? - நடை தொடர்கிறாள் ! 'நல்ல காலம் ! எங்க கமலிப் பெண்ணு மட்டும் மகாக் கொடுமையான வரதட்சணைக்குப் பலி ஆகிடாமல் தப்பிச்சிட்டா !... ஏன், என்னாலே மட்டும் அதுமாதிரி தப்பிப் பிழைக்க முடியாதா, என்ன ? வைராக்கியமான ரோஷத்தில் கம்பீரமாகவே தலை நிமிர்ந்தாள் தலை நிமிர்ந்தவளை இனம் விளங்காத இன்பவேதனை ஆட் கொண்டது ஆம் உஸ்மான் சாலையிலே பறந்து மறைந்தது மிஸ்டர் செந்தில் நாதனின் டால்ஃபின்'தான் ! தெரு வந்தது. "தாயே, பசிக்குதே...' 'பசிச்சால் சாப்பிடுறது தானே, தந்தையே !' தே-2