பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஆனால், வழிதான் தெரியலிங்க. நான் அனாதைப் பாவி. உங்க மாதிரி ஒரு மகள் கூட எனக்கு மிஞ்சல்லே ; நான் கொடுத்து வைக்காதவன் ; அதிலேயும், படுகிழம். சொல்லச் சொல்லக் கேட்காமல், வயிறு பசிச்சுக்கிட்டே இருக்குதுங்களே ? நான் என்னா செய்வேன்?எங்கிட்டுப் போவேன்?’’

ஈரம் சொட்ட, ஒரு ரூபாய் நாணயத்தைப் பரதேசியிடம் நீட்டினாள் ; நாளைக்குக் காலையில் தன்னை வந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டாள் ! நிஜமாவே செந்தில்நாதன் மனிதத் தன்மையும் மனிதாபிமானமும் உள்ளவராகவே தோன்றுகிறார். அவரோட இருப்பிடம் அறிஞ்சு, அவர்கிட்டே இந்தப் பிச்சைக்காரப் பெரியவரை அனுப்பினால் நியாயமான ஒரு தமிழ் உயிர் நீதியோடு பிழைச்சுப் போகும்!'- இனி, பார்வதி நிற்கமாட்டாள்!

வயிற்றுப் பணிக்கு நேரம் ஆகிவிட்டது!.... §