பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பார்வதிக்கு எப்போதும் முகராசி அதிகம். கண்மணிப் பதிப்பகம் வந்தது. மணி ஒன்பது, முப்பது வரவேற்புப் பெண் வத்சலா, தொலைபேசிக் கருவி யின் வாயைச் சாமர்த்தியமாகப் பொத்திக் கொண்டே, வாங்க, பார்வதி, வாங்க, என்று கூறி வாய் நிரம்பின வாத்சல்யத்தோடு பார்வதிக்கு வரவேற்புக் கொடுத்தாள். திரும்புகிறாள், பார்வதி. "குட்மார்னிங், மிஸ் பார்வதி.” 'குட்பார்னிங், மிஸ்டர் கமல் ' உரிமையாளர் கனகசபை உள்ளே இருக்கிறார் வணக்கங்க '

  • வணக்கம் ... வணக்கம் !'

எடுபிடிப் பையன் யூசப், பதிப்பகத்தின் 1985 வெளியீடுகளைப் பார்சல் கட்டும சாலமன்-இப்படி அவர வர்கள் பார்வதியின் பால் பாசம் காண்பிக்கின்றனர். 'பில் போடுவதில் மூழ்கியிருந்த பூபேந்திரகுமார் மட்டிலும் வாயைத் திறக்கவில்லை. அர்த்தம் இல்லாத அவனுடைய பார்வை யின் நியாயப்படுத்தப்பட முடியாத அநாகரிகமான அடாவடியை அங்கீகரிக்க மறுத்த பார்வதி பத்துப்பன்னிரண்டு பேர் முன்னிலையிலே அவனுக்குச் சூடு கொடுத்த சோகத்தை அதற்குள் பறந்திருக்க மாட்டான்.