பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


பழைய நினைவுகளின் மின் வீச்சில் பார்வதி பெருமூச் செறிந்தாள். நான்கு சுவர்ப் பக்கங்களிலும், திருமண வீட்டில் மொய் எழுதப்பட்ட பரிசில் பொருட்களை அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருப்பதைப்போல, அணி வகுத்தும் அணி செய்தும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிதான புத்தகங்கள் நிரம்பி வழிந்த ஹால் வந்தது. கடந்தாள் அவள். - அவள் : பார்வதி. துப்புரவோடும் ஒப்புரவோடும் பொலிந்த அதுதான் அவளுடைய நாற்காலி. எதிர்மேஜையில் தட்டெழுத்து இயந்திரம். நாற்காலியிலே அவள் அமர்ந்து விட்டாள் என்றால் அவளும் இயந்திரம் ஆகிவிடுவாளென்றுதான் அர்த்தம். அமர்ந்தாள். மேஜை டிராயரைத் திறந்தாள்; நேற்றுச் சாயந்தரம் டைப் அடித்து முடித்து வைத்து விட்டுப் போயிருந்த அவசரம் அவசரமான நினைவூட்டல் கடிதங் களையெல்லாம் ஒரே கொத்தாக எடுத்து மேஜை மீது வைத்துக் கொண்டாள். ஒய்வாக இருக்கிற நேரத்தைப் பார்த்து, அவற்றில் ஐயாவிடம் கையெழுத்து வாங்கி இன்றைக்கு மெயிலில் அனுப்பி விடவேண்டும், பார்வதி ! வந்திட்டீங்களா ?” உள்ளேயிருந்து பாஸ் குரல் கொடுத்தார். பார்வதி "ஆமாங்க' என்று சொல்லி எழுந்து நின் றாள். பூங்கரம் குவித்து வணக்கம் சொன்னாள். - கனகசபையும் வணக்கம் தெரிவித்தார். நீங்க உங்க வேலையைப் பாருங்க, பார்வதி, "என்றார்.