பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


"ப்ளீஸ் வெயிட் ஏ மினிட்!” பார்வதிக்குக் கருமத்திலேதான் கண்!-ஐயாவின் பேரில் படத்துறையின் கொள்ளிக் கண்ணுமா பட்டுத் தொலைக்க வேண்டும்?- ஊம்; பணத்திற்கு போகவும் வரவும் வடிகால் வேண்டுமோ?- உள்மனம் சலனம் கண்டது. சலனம் மனத்தோடு சரி: பூவிரல்கள் சுறுசுறுப்பு அடைந்தன. உள்ளே : கனகசபை மகராஜாவின் தர்பார் நடந்து கொண் டிருந்தது. பூவாணத்தின் ஒளிச்சிதறல்கலாக, சிரிப்பின் அலை கள் மின் வெட்டின. இந்த ராஜ்யத்தில் அன்பிற்குப் பஞ்சமே இருப்பதில்லைதான், எனவேதான், அங்கே காப்பியின் சுகந்தம் சுகமாகவே மணக்கவும் செய்தது. கண்மணிப் பதிப்பகத்தின் புகழில், உரிமையாளர் கனக சபையின் செல்வாக்கு ஆட்சி செய்ததிலும் வியப்பில்லை தான். அவர் நாலுபேருக்கும் நல்லவர் ; நாலு பேருக்கு நடுவில் உழைத்தவர் ; நாலுபேர் போற்றிட உழைத்தவர். நல்ல குணம் கெட்டு விடக்கூடாதென்று நினைத்தோ என்னவோ. அவர் இன்னமும் நாற்பது வயதைத் தாண்டாமலே இருந்தார். காலடி அரவம். அரவம் - சத்தம், பார்வதிக்கும் பயத்திற்கும் வெகுத் தொலைவு காதளவோடிய கண்களை உயர்த்தினாள் : இதழ்க்கடை யில் பூஞ்சிரிப்பின் கடைவிரிப்பு. "நான் போயிட்டு வர்வேன். பார்வதி என்னை மறந்திட மாட்டிங்களே ?”