பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


"ஆமாம்; மயந்திட்டதாலேதானே, உங்களை சட் டென்று இனம் கண்டுக்கிட முடியல்லே?" அரைக்கணத்தில் ஆண்டவனை ஆங்கிலத்தில் கூவி அழைத்து, கால் வினாடி வருந்தினார் பிரதிநிதி. சம்பவம் ஒன்றினை நினைவூட்டினார். தமிழ்ப்பேச்சுப் போட்டி ஒன்று, அனைத்துக் கல்லூரிகளின் சார்பில் நடந்த சமயத்தில் ராணிமேரி கல்லூரியிலிருந்து போட்டியில் கலந்து கொண்டபார்வதி தங்கப்பதக்கத்தை வென்று தமிழ் வீராங்கனையாக நின்ற நிகழ்ச்சியை விளக்கியதோடு அந்தப் போட்டியில் தானும் பங்கு கொண்டு மண்ணைக் கவ்வின துயரத்தையும் வர்ணித் தார் இளைஞர். இதை நீங்க வச்சுக்கங்க' என்று கூறி, மற்றொரு பார்வையாளர் அட்டையையும் சமர்ப்பித்தார். கனவுக் காட்சிகளிலே மிதந்தாள் பார்வதி!- தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டபோது, பார்வதி என்று அன்புடன் விளித்துப் பாராட்டுத் தெரிவித்த அந்த வாலி பர் இவராகத்தான் இருக்க வேண்டும்! 'உங்க பேரைச் சொல்லலையே?’’ 'நீங்க அதைக் கேட்கலையே?- ஒ கே! என்னோட பெயர்: தமிழ்மணி!... இனி மறுதரம் உங்களைச் சந்திக்கக் கூடியபாக்கியம் கிடைச்சா, உங்க கையிலே நான் அசல் தமிழிலேயே பேசி மகிழ்வேன் பார்வதி!' 'ரொம்ப நன்றி; ஐயாவை போய்ப் பாருங்க!' உரிமையாளரின் அறைக்கு வெளியே ஜாக்கிரதைப் பிராணி எதுவும் தரிசனம் தராத காரணம் கொண்டு, தமிழ்மணி உள்ளே நுழைந்தான்! தமிழ்த் திரைப்படத் துறைப் பிரதிநிதி ஒருவர் தோன்றினார்.