பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


சாப்பாட்டுப் பிரச்சனை தீர்ந்தது. கோணி'- 3 பாண்ட் ரேடியோ-காலெட் - ரெக் கார்டர் ஜமாய்த்துக் கொண்டே இருந்தது. . சாலமன் தந்த செய்திப் பத்திரிகை ரோசியின் பார் வையில் ஊர்ந்தது. நூர் உன்னிசாவுக்கு மெளனமே ஒரு பொழுது போக்குத்தான். . வச்சலாவின் மூச்சுக்காற்று ரோசியின் பக்கம் இழை யத் தொடங்கியது. பார்வதியின் கைகளிலே அகல் விளக்கு சுடர்தெறிக் கிறது. வத்சலா கணவுகண்டு விழித்தவள் மாதிரிபார்வதியை நெருங்கி, "பாரு வர்ர ஆவணியிலாவது எங்களுக்குக் கல்யாண விருந்து வச்சிடுவியா ? இனிமேலும் எங்களாலே ஒரு நாள் கூட பொறுத்திருக்க முடியாதாக்கும் !" என்று கண்டித்து எச்சரித்தாள். பார்வதி ஏறிட்டு நோக்கிப் புன்னகை செய்தாள் எல்லாம் பகவான் கையிலே தான் இருக்கு !' என்றாள். 'விருந்துக்குக்கூட பகவானையே அரேஞ் செய்துட்டி யாக்கும்?" அதற்குள், "பார்வதி அம்மா பார்வதி சத்தியம் பண்ணி டாதே ! . ஆணையும் வச்சிடாதே !' கனகசபை நீர் நிரம்பின கண்களோடு நின்றார், அன்பும் பாசமும் இரண்டறக் கலந்தால், இப்படித் தான் தரிசனம் தருமோ ?