பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


அவளுக்கு நினைவு வந்தது!-விடியல் பொழுதிலே வீட்டில் முகப்புத் தோட்டத்தில் சிந்தனை வசப்பட்டவளாகச் சுய தரிசன நிலையில் மெய்மறந்து நின்றிருந்த நேரங்களில் உஸ்மான் சாலையில் நேர்வழியிலேயே போக வேண்டிய வன், ரோஜா நிறப் புதிய காரைத் திருப்பி மகாலட்சுமித் தெருவில் மடக்கி நிறுத்தியபின், தன்னையே பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, பிறகு தோட்டத்து ரோஜாப் பூக்களைப் பறித்துச் சென்ற சந்தர்ப்பங்களை அவளால் அவ்வளவு லகுவில் மறந்துவிட முடியாதுதான்!- நீங்க பார்வதி!... நான் செந்தில்!” ஒருநாள் உள்ளார்ந்த அன்போடு மனம் நெகிழப் பேசிய சொற்களையும் அவள் இன்னமும் மறந்துவிடவில்லைதான் ! அதுசரி- இந்தப் பெண் யார் ? வேர்வை பெருகுகிறது. தெரிந்த முகமா கத் தெரிகிறதே?... 'ஹிரோ மெஜஸ்டிக் 50 சுழன்றது. செந்தில்நாதன், அந்தச் சின்ன விபத்தின் பெரிய கதாநாயகனாகச் சுழன்றான். பெரிய இடத்துப் பிள்ளையாண்டானுக்குக் காருக்கும் ஸ்கூட்டருக்கும் தானா பஞ்சம் ஏற்படப் போகிறது ! "தாரா'... தெய்வாதீனமாக மயிரிழையில் தப்பிவிட்ட அவள் இப்போது சகஜமாகவே காணப்பட்டாள். பலத்த அடி எதுவும் பட்டிருக்க நியாயமில்லை. இடுப்பை மட்டும் தடவிக் கொண்டாள். வெட்கத்தோடு அங்கும் இங்குமாக விளித்தவள், மறுநொடியில் தலையைத் தாழ்த்தினாள் : குனிந்தாள். செட்டியார் தன் பதிப்பகத்திற்குத் திரும்பினார். இனிமேல், பார்வதிக்கும் அங்கே அப்பொழுது வேலை கிடையாது!-திரும்ப எத்தனம் செய்தாள் ; சுரீர்” என்ற