பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


பதட்டம் நெஞ்சடியில் கிளம்பியது:- தாரா!... யார் இந்தத் தாரா கல்லூரித் தோழி தாராவேதானா?கபாலி கோவில் ஏழைக் குருக்களின் சீமந்தப் புத்திரியான பேரழகி தாராலேதானா?- நின்றாள் ; பார்த்தாள் ; ஊடுருவிப் பார்த்தாள் ; பார்வையிட்டாள் ; நகர்ந்தாள்; நடந்தாள் "ஹாய், தாரா!... நீ தானா ? அதுக்குள்ளாற என்னை மறந்திட்டியா ?' என்று வினவினாள் 'விழி, விழி, யென்று விழிக்கிறாள். தாரா. பேய் அறைந்து விட்டதா அவளை ? செக்கச் சிவந்த முகத்தில் அழகோடு அசடும் வேர்வையும் ! சேர்ந்து வழிகின்றன; தடுமாறினாள் ஆமாம் ? நேக்கு நினைப்பு வந்துடுத்து ; நீ பார்வதி!' என்றாள் அவள். பார்வதி கண்களை மூடிக் கண்களைத் திறப் பதற்குள் - செந்திலும் தாராவும் மறைந்து விட்டார்கள் ! எங்கே மறைந்தார்கள் ? எப்படிப் பறந்தார்கள் ? பார்வதி ஆத்திரம் அடைந்தாள் ; இவங்க எங்கே போனால் நமக்கென்ன ?... இல்லே இவங்க எக்கேடு கெட்டால்தான் எனக்கென்ன ?- கடமை அழைத்தது ! வழிந்த வியர்வையை வெகு பதனமாக எச்சரிக்கை யுடன் புடவை முந்தானையைக் கொய்து துடைத்துக் கொண்டாள் பார்வதி. உள்ளே முதலாளி சத்தமிட்டார். தேமதுரத் தமிழின் படைப்பிலக்கியத்தை மட்டுமன்றி, இளைய தமிழர் தலை முறையையும் சுயநல நோக்கில் பாழ்படுத்தி வரும் நிலை பற்ற ஸ்டார் எழுத்து மன்னர்கள் மற்றும் மன்னிகள் சிலரின் திசைகளில் கூட தலைவைத்துப் படுக்க மனம் ஒப் பாதவர்.