பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


பார்வதிக்கு நன்றாகவே தெரிந்த-தெரிந்துகொண்ட சேதிதான். பகல் நட்சத்திரங்களாக மூவர் கைப்பிரதிகளைச் சுமக்க முடியாமல் சுமந்தபடி வெளியே வந்தார்கள். பார்வதிக்கு நல்ல மூச்சு வந்தது. ஆறுதலோடு நேத்தி ரங்களைத் திருப்பிய நேரத்தில் கவிஞர் புன்னகையும் முழு நிலவுமாகத் தென்படவே, வேதனையின் அதிர்ச்சியை இப்போதும் சந்தித்தாள். கண்ணுக்குத் தெரிந்த புள்ளிமானாகக் காலம் ஓடியது. கண்களுக்குத் தெரியாமலே ஒடியது. வத்சலா, 'பாரு எங்க சாதியிலே இருந்துயிட்டு வர்ற வரதட்சணைக் கொடுமைங்க உங்க இனத்திலேயும் கூட இருக்குமா ?' என்று விசாரித்தாள். பார்வதியின் எழிலார்ந்த வதனம் சிறுத்தது ; விழிகள் சிவந்தன. நல்லாக் கேட்டே, போ ! வரதட்சணைப் பிரச்சனைக்குப் பலியாகாத சாதி சமுதாயம் நம்ம நாட்டிலே எங்கே இருக்குதாம் ?' என்று பதிலுக்குக் கேட்டாள். வத்சலா 1 முந்தி ஒரு தரம் சொன்னதையே இப்பவும் உன் ைக யி லே நினைப்பூட்டுகிறேன். வரதட்சணைக்காக இல்லாமல் எனக்காகவும் என்னோட பரிசுத்தமான அன்புக்காகவும் மாத்திரமே என்னைத் திரிகரண சுத்தியோட அங்கீகரிச்சு ஊர் உலகத்தின் சந்நிதானத்திலே என் கழுத்திலே மனசு பூர்வமாய் மூணு முடிச்சுப் போட முன் வர்ற உண்மையான மனிதாபி மானம் கொண்ட ஒரு நல்ல பிள்ளைக்குத்தான் நான் என்னோட பவித்திரமான உயிரையும் புனிதமான உடலையும் அர்ப்பணம் செய்வேன் ! என்னுடைய இந்த வைராக்கியத்திலே, எனக்கு நானே தான் விதி இல்லாட்டி விதியோட எழுத்தைக் கிழிச்சு வீசிட்டு. எனக்கு நானே முற்றுப்புள்ளி வச்சுக்கிடவும் தயங்கமாட்டேன் ! இது...' அவள் பேச்சை முடிக்கவில்லை.