பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சங்கத் தமிழுக்கும்கூட, பொது விளம்பரம் பொது வாகவும் தேவைப்படும் போலும் ! ரேடியோவுக்கு நிலவு துரங்கும் நேரம் அது. வெளிவாசலில் அப்பொழுது நிலவு விழித்துக் கொண்டிருந்ததுடன் சரி : பாட்டு எதுவும் பாடக் காணோம். கண் விழித்துக் கொண்டிருக்கக் கடமைப்பட்ட காரணத்தால், பார்வதி துரக்கத்தைக் கெடுத்துவிட்டு, ஜாக்கிரதையாகவே விழித்துக் கொண்டிருக்கிறாள். கண்கண்ட தெய்வமாம் காஞ்சி மாமுனியின் அமுத வாக்குகள் எதிரொலிக்கின்றன - மீண்டும். ஒரு கன்னிப் பெண் தெய்வத்தை சுயநலமிகளால் சமூகத்திலே உண்டு பண்ணின வரதட்சணை என்னும் பாவத்திற்கு பலி வாங்கும் வழக்கம் மிக மிகப்பாவம் ! இந்தப் பாவத்துக்குச் சமூகமும் நாடும்தான் நல்வழி கண்டு.அபலைக் கன்னிகட்கு விடிமோட்சம் ஏற்படுத்த வேண்டும் ! கடைக்குட்டிப் பயல் ராமையாவுக்கு இன்றைக்கு திருவிழா பட்ட பாடுதான் - டி.வி.யில் ஒலியும் ஒளியும்’ நடந்து கொண்டிருக்கும்:- சிவாஜி, ரஜினி, எம்.ஜி.ஆர். மோகன், சத்யராஜ், பூரீதேவி, ஊர்வசி, இளவரசி, சரிதா, பாக்கியராஜ் முதலானோர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசிலா, ஜேசுதாஸ், டி.எம்.எஸ், மலேசியா வாசுதேவன் மற்றும் சீர்காழி சார்பில் பிட்டு வாய்களை அசைத்து