பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


சந்தித்து வள்ளிசாகப் பன்னிரெண்டு நாட்கள் ஓடி விட் டனவே ? சிநேகிதி தாரா என்ன ஆனாள் ? தோழர் செந்தில் என்ன ஆனார் ? அவர்களது காதல் கதை என்ன ஆயிற்று ? ஒரு கதையும் தெரியவில்லை ! தெரு நாய்க்கு வேலை இல்லை, பிச்சைக்காரப் பெரியவருக்கு இந்நேரம் நிழல் கிடைத் திருக்கும் ! பார்வதியின் தர்மம் அவள் தலையைக் காக்க வேண் டியதுதான் பாக்கி அப்பா ஆத்மநாதனை இன்னும் காணவில்லை. மயி லாப்பூர்வரை போயிருக்கிறார், சொல்லிவிட்டுதான் புறப் பட்டார். வரன் விஷயம் வரதட்சணை வாங்காத அபூர்வமான மாப்பிள்ளையாம் ! என்னவோ பெயர் சொன்னாரே அப்பா ?- ஒ நாராயணன் ! நடுத்தரவர் கத்திற்கு லாயக்கான பேர்தான் 1 எதையோ நினைத்தவள் ஏனோ தன்னுள்ளே சிரித்துக் கொண்டாள் வரந்தாவுக்கு வந்து தாழ்பாளைச் சரிபார்த்து விட்டுக் கூடத்துக்குத் திரும்பியவள் திரும்பவம் தன்னுடைய அறைக்குச் சென்று ட்ரங்கு பெட்டியைத் திறந்து, அந்த காதல் கடிதங்களின் கனமான உறையைக் கனமான நெஞ்சத்தோடு சுமந்து வந்து குறிச்சியில் அமர்ந்தாள். கொசுப்பண்ணை மின் காற்றின் சுகத்தை அனுபவித் ததோடு திருப்தி அடையாமல் அம்மா பேரிலும் படை யெடுத்துத் தொலைக்கவே, பார்வதி ஆத்திரம் அடைந் தாள். பேப்பரை எடுத்துக் கொசுக்களை விரட்டிவிட் டாள். அம்மா புரண்டு படுக்கிறாள்.