பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


டாக்டர் சுசிலா அம்மாள் சிபாரிசு செய்த இப்ரால் டானிக் நன்றாகவே வேலை செய்கிறது. இல்லையென் றால் அம்மா எங்கே அசந்து துரங்கப்போறாள் ? பூப்பாரம் சுமந்த புண்ணியவதி, குடுமபப பாரத்தைச் சுமக்க மாட் டாமல் எத்தனை தூரம் அவதிப்படுகின்றாள்?--பார்வதி தன்னுடைய கலியாணத்தில் போய் நின்றாள். தலையைச் சுற்றியது; எழுந்து விட்டாள். இப்போது அவள் பார்வையில் பிளாஸ்டிக் உறை தட்டுப்பட்டது. பிரகடனம் செய்யப்படட காதலின் கடிதங்கள் அல்லவா அவை? காதலாம் காதல், கள்ளமார்க்கெட் இல்லாமல் காதல் கூட விலை போகாதே என்ன விலையாம் கிலோ? தம்பிப்பயல் வந்து விட்டான். அடடே, அப்பாவும் திரும்பி விட்டார். சரிபாதி மன உளைச்சல் மிச்சம். பார்வதிக்கு இப்போதுதான் பசி தெரிந்தது; பசி எடுத்தது. பாத்திரங்கள் சத்தம் போட்டன. ராமையா மட்டும் சத்தம் போடவில்லை: சாப்பிட் டான். ராமையாவிற்கான பாயை உதறி போட்டாள் அவள். அதிலேதான் எத்தனை எத்தனை பொத்தல்கள்! - ஆயிரம் கண் உடைய ஆயிமகமாயிக்குத்தான் வெளிச்சப்!- முதல் தேதி சம்பளம் வாங்கின கையோடு, புதுப்பாய் ஒன்று வாங்கிட வேண்டும். கோடை முடிவதற்குள்ளாக வாங்கி விட்டால் சரி. சின்னஞ்சிறு தலையணையையும் எடுத்துப் போட்டாள் தம்பிக்கு ஒரு பழக்கம் உண்டு, ராத்திரியில் சாப்பிட்டுக் கையை சழுவினானோ இல்லையோ, துரக்கம் ஒடோடி வந்து விடும்!